வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இந்தோனேசியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை? கடும் எதிர்ப்பு !

A plan to make teenage girls undergo virginity tests to enter senior high school in a city in Indonesia has sparked outrage. இந்தோனேஷியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக வந்த கல்வி அதிகாரிகளின் அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தோனேஷியாவில் உள்ல சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமாலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு  கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண  கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி கல்வி அதிகாரி முகமது ரஷீத் கூறுகையில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபச்சாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும் இதுபோன்ற திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்றார். ஆனால் இது மனித உரிமைகளுத்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்தது.
  பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனால் இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. குழந்தைகள் மீது வன்முறையைத் திணிப்பதும், அவர்களை அச்சுறுத்துவதுமான இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். இதுபற்றி மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில் மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும்போது, இதுபோன்ற பரிசோதனைகள் தேவையற்றது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார். 
 இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையர் எரிஸ் மெர்டகா ஜாகர்த்தாவில் அளித்த பேட்டியில், மாணவிகளுக்கு கன்னித்தன்மை இழப்பு என்பது செக்ஸ் நடவடிக்கைகளால் மட்டுமல்ல, விளையாட்டு, உடல்நலக்குறைவு போன்றவற்றால் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகளின் இந்த திட்டம் கண்டனத்துக்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக