செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஏன் திமுக வாதாட அனுமதி கேட்கிறது? டான்சிக்கு நடந்தது மாதிரி ஆகிடகூடாதில்லை ?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக தரப்பில் திடீரென மனுத்தாக்கல் செய்யப்பட்டு தங்களையும் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி இறுதிக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் சார்பாக திமுக எம்.பி. டி.எம். செல்வகணபதி ஒரு மனுவை பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அதில் இந்த வழக்கில் தங்களையும் வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞருக்கு உதவ தங்களது தரப்பு வழக்கறிஞர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இம்மனுவுக்கு நாளைக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா மற்றும் அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார். திமுக தாக்கல் செய்த திடீர் மனு மீது வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக