புதன், 21 ஆகஸ்ட், 2013

எம்.ஜி.ஆர் கதி என்னவாகபோகிறது ? காத்துக்கொண்டிருக்கும் கோடம்பாக்கம் ! MGR மதகாமராஜா

ஒரு அசிஸ்டண்ட் இயக்குனராக இருந்து ஹீரோவாக ஃபார்ம் ஆனவர் நடிகர் விஷால். சில வெற்றிப் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாலும், விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சமர், பட்டத்து யானை திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. எனவே அடுத்ததாக வெளியாகவிருந்த மதகஜராஜா(MGR) திரைப்படத்தைத் தான் விஷால் பெரிதும் நம்பியிருந்தார்.
ஆனால் சில பொருளாதார நெருக்கடி காரணமாக மதகஜராஜா படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். எனவே விஷால் தனது சம்பளப் பணத்தைக் கூட வாங்காமல் முதலில் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையை துவங்குங்கள் என்று கூறிவிட்டாராம். சுந்தர்.சி-யின் இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டு படங்களில் ஏமாற்றிய ஹீரோவின் நடிப்பிலும், இரண்டு படங்களில் கலகலப்பாக வைத்திருந்த இயக்குனரின் இயக்கத்திலும் வெளியாகவிருக்கும் மதகஜராஜா திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரசிகர்களைப் போலவே கோடம்பாக்கமும் மதகஜராஜா திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருந்தாலும், அவர்களின் எதிர்பார்ப்பே வேறு மாதிரியானது.

சமீப காலமாக எம்.ஜி.ஆர் என்ற பேரைச் சொன்னாலே பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் விஸ்வரூபம், தலைவா படப்பிரச்சனைகளில் திரையுலகமே கப்சிப் என இருந்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முதலில் ஓங்கி குரல் கொடுத்தவர் விஷால் தான் என்பதால், எம்.ஜி.ஆர் என்ன கதி ஆகப்போகிறது என்பதைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறது கோடமபாக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக