திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ஜேம்ஸ் வசந்தன் கைதுக்கு 50 போலீஸ் ! அடேங்கப்பா இதுதாண்டா தமிழக போலீஸ் ! ராமதாஸ் கண்டனம்

 தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான படுகொலைகள் நடந்துள்ளன; 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டுகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் இன்னும் துப்பு துலக்கப்படவில்லை ஆனால் ஒரு ஜேம்ஸ் வசந்தனை கைது பண்ண 50 போலீஸ் ! விபச்சாரிகளின் குரலுக்குதான் போலீசின்  மதிப்பு 
 காவல்துறையினர் பழிவாங்கும் செயல்களுக்கு துணை போவதை விடுத்து சட்டம் & ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை ஆதாரமே இல்லாமல், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்திருக்கிறது. பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.ஜேம்ஸ் வசந்தன் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் ராதா வேணுபிரசாத் என்ற 65 வயது பெண்மணியை மிரட்டியதாகவும், அவரை நோக்கி ஆபாச செய்கைகளை செய்ததாகவும் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் பணியாற்றி வரும் அவர் மீது இதுவரை இத்தகைய புகார்கள் எழுந்ததில்லை. இப்போதும் ஜேம்ஸ் வசந்தன் மீது காவல்துறையினர் தெரிவிக்கும் குற்றச்சாற்றுகளுக்கு எந்தவித முதற்கட்ட ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை. ஜேம்ஸ் வசந்தனுக்கும், ராதா வேணுபிரசாத் குடும்பத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவரும் மோதலின் ஒரு கட்டமாக, பழிவாங்கும் நோக்கத்துடனேயே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜேம்ஸ் வசந்தன் மீது கூறப்பட்ட குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அதனடிப்படையில் விசாரணை நடத்தி அதன்பிறகு தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எந்தவித விசாரணையும் நடத்தாமலேயே 50க்கும் மேற்பட்ட காவலர்களை அனுப்பி ஏதோ தீவிரவாதியை கைது செய்வதைப் போல அவரை கைது செய்திருப்பதைப் பார்க்கும் போது இதன் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை உணரமுடிகிறது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான படுகொலைகள் நடந்துள்ளன; 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டுகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் இன்னும் துப்பு துலக்கப்படவில்லை. தமிழகத்தையே உலுக்கிய பல்வேறு அரசியல் படுகொலை வழக்குகளின் விசாரணை, கிணற்றில் போட்ட கல்லாக இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடக்கிறது. இத்தகைய நிலையில், இருக்கும் காவலர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தாமல், இதுபோன்ற பழிவாங்கும் செயல்களுக்கு துணைபோகச் செய்வது தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு நிலைமை மேலும் மோசமடைவதற்கே வழி வகுக்கும். எனவே, காவல்துறையினர் பழிவாங்கும் செயல்களுக்கு துணை போவதை விடுத்து சட்டம் & ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்; இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக