சனி, 3 ஆகஸ்ட், 2013

14 மாஸ்டர் டிகிரி , 64 சாப்ட்வேர்கள் மதுரை விஜயலட்சுமி too good to be true

வழிகாட்டும் மதுரை பெண்!
14 மாஸ்டர் டிகிரி பெற்று, 64 சாப்ட்வேர்களை தயாரித்த, மதுரையின் முதல் பெண் கணினி மென்பொருள் ஏற்றுமதியாளரான, விஜயலட்சுமி: சொந்த ஊர் கோவை. இன்ஜினியரிங் படிக்கும் போது, வீட்டை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்டேன். திடீர் விபத்தில், கணவன் இறந்த போது, என் வயது, 25. காதல் கணவன் இல்லாத வெறுமை, தற்கொலைக்குத் தூண்டியது. குழந்தைகளின் முகம் மனதில் நிழலாடியதால், குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்ற, மன உறுதி பிறந்தது. வங்கியில், ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று, சிறிய சாப்ட்வேர் நிறுவனத்தை, 12 ஊழியர்களுடன், கணவர் வீட்டிலேயே ஆரம்பித்தேன். கடின உழைப்பால் இன்று, 400 ஊழியர்களுடன், மதுரை, டில்லி, பெங்களூரு, ஐதராபாத் என, நான்கு கிளைகளாக வளர்ந்துள்ளது. கிராமத்து இன்ஜினியரிங் மாணவர்கள், கணினி தொடர்பாக படிக்கின்றனரே தவிர, தொழில் ரீதியான திறனை வளர்க்காததால், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. எனவே, நான் சாப்ட்வேர் துறையில் பெற்ற நன்மைகளுக்கு பிரதிபலனாக, "வெப் டெவலப்பிங்' பயிற்சியை இலவசமாக தந்து, "மைக்ரோசாப்ட்' துணையுடன், "ஆன்-லைன்' தேர்வு நடத்துகிறேன்.
இத்தேர்வு முடிவுகள், மைக்ரோசாப்ட்டின் இணையதளத்திலேயே வெளிவருவதால், வென்றவர்களுக்கு உலகின் முக்கிய எம்.என்.சி., நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வெளியிடங்களில் இப்பயிற்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர்.
ஆண்டிற்கு, 200 கிராம மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன். இதுவரை, யாரும் தோல்வி அடையவில்லை. மேலும், விதவை பெண்களுக்கு கணினி பயிற்சி, டெக்னிக்கல் டிரெய்னிங், மன உறுதியை வளர்க்க, கவுன்சிலிங் போன்றவற்றை இலவசமாக வழங்கி, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறேன். சாப்ட்வேர் துறையில் வெற்றியடைந்ததற்காக, சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதை, மத்திய, மாநில அரசிடமிருந்தும், இங்கிலாந்தின், "விமன் ஆப் தி இயர்' விருதும் பெற்றிருக்கிறேன். vijailakshmi.com
தொடர்புக்கு: 98421 74800.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக