புதன், 24 ஜூலை, 2013

U.P : தங்கையை கௌரவ கொலை செய்த இஸ்லாமிய இளைஞன் தலைமறைவு

காதலை கைவிட மறுத்த இளம்பெண்ணை குடும்ப மானம் கருதி உடன் பிறந்த சகோதரனே சுட்டுக்கொன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டம், கங்கேரு கிராமத்தை சேர்ந்தவர் சய்மா (17), அதே கிராமத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இந்த காதலை கைவிடும்படி சய்மாவின் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், குடும்பத்தினர் எதிர்பார்த்ததற்கு மாறாக, நாளடைவில் காதலர்களிடையே நெருக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில், நேற்று இது தொடர்பாக சய்மாவின் சகோதரர் ராசாகான் (23) தங்கையை கண்டித்து திட்டினார். சய்மாவும் பதிலுக்கு பேசவே வாக்குவாதம் முற்றியது. குடும்ப கவுரவத்தை குலைக்கும் வகையில் தங்களது அறிவுரையை மீறி தங்கையின் பிடிவாதம் முற்றுவதை அறிந்து ஆவேசமடைந்த ராசாகான் வீட்டில் இருந்த துப்பாக்கியால் சய்மாவை சுட்டுக் கொன்றார். கொலையை மறைக்க வீட்டு தோட்டத்தில் குழி தோண்டி பிணத்தை ரகசியமாக புதைத்தார். இது தொடர்பாக, போலீசாருக்கு சிலர் தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்று பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருக்கும் ராசாகானை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக