ஞாயிறு, 28 ஜூலை, 2013

IPL சூதாட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதராமும் இல்லையாம் ! சீனியும் மெய்யப்பனும் Free நீ ரொம்ப நல்லவன்டா !


ஐ.பி.எல். சீசன் 6-ல் சூதாட்டத்தில்
ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியைச்
சேர்ந்த ஸ்ரீசாந்த், அன்கீத் சவான், சண்டிமால் ஆகிய 3 வீரர்கள் கைதானார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்ட தரகர்கள் பலரும் கைதானார்கள். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியின் கவுரவ தலைவராக இருந்த குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்று விசாரிப்பதற்கு பி.சி.சி.ஐ.-ஆல் இரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இன்று கொல்கத்தாவில் பி.சி.சி.ஐ. துணைத்தலைவர் நிரஞ்சன் ஷாவிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. பின்னர் நிரஞ்சன் ஷா நிருபர்களிடம், மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதராமும் இல்லை. அதேபோல் ராஜஸ்தான் அணியின் உரிமையாளரான ராஜ்குந்த்ரா மீதான குற்றச்சாட்டிற்கும் ஆதாரமில்லை. இந்த அறிக்கை மீது ஐ.பி.எல். நிர்வாகக்குழு ஆகஸ்ட் 2-ந்தேதி இறுதி முடிவு எடுக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக