ஞாயிறு, 28 ஜூலை, 2013

4 ஆண்டுகளில் 555 பேர் போலி ‘என்கவுண்டர்கள்’ மத்திய அரசு தகவல்

மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் கடந்த 2009–ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013–ம் ஆண்டு பிப்ரவரி 15–ந்தேதி வரை பாதுகாப்பு படைவீரர்கள், துணை பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும்
போலீசாரால் 555 போலி என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 138 போலி என்கவுண்டர் சம்பவங்களும், குறைந்தபட்சமாக சத்தீஷ்கார் மாநிலத்தில் 29 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. மேலும் குஜராத் மாநிலத்தில் இஷ்ரத் ஜகான் மற்றும் சதீக் ஜமால் ஆகியோரின் போலி என்கவுண்டர் சம்பவம் குறித்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக