செவ்வாய், 30 ஜூலை, 2013

லட்சுமிராய்:மீடியாக்காரர்கள் என்னையே ஏன் குறிவைக்கிறார்கள்?

எனது 15 வயதில் நடிக்க வந்துவிட்டேன். ஆரம்ப காலத்தில் கேமரா முன்
நிற்பதற்கு பயப்படுவேன். பிறகு என்னை தயார் படுத்திக்கொண்டேன். என்னைப் பற்றி அடிக்கடி வதந்திகள் வருகிறது. மீடியாக்காரர்கள் என்னையே ஏன் குறிவைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கு காரணம் எனது நடிப்பு தொழில்தான் என்று ஆறுதல் அடைவேன். எனது 2வது படம் ‘குண்டக்க மண்டக்க படத்தில் கிளாமர் வேடத்தில் நடித்தேன். இப்படி நடிப்பது தவறா? சரியா? என்று என்னால் கணிக்க முடியவில்லை.  எனக்கு காட்பாதர் யாரும் இல்லாமல் எல்லாவற்றையும் கடந்து வந்தேன். இப்போது எதை தேர்வு செய்யவேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன். மங்காத்தா படத்தில் அஜீத்துடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்தேன். அவர் எளிமையானவர் மட்டுமல்ல ஈடுபாடுடன் நடிப்பவர். என்னுடைய சொந்த அனுபவங்களையும், வாழ்க்கை விஷயங்களையும் அவரிடம் பகிர்ந்து கொள்வேன். திரையிலும், திரைக்கு பின்னாலும் அவருடன் நட்பாக பழகுவேன். சினிமாவையும், வாழ்க்கையையும் பிரித்து வைத்து நடந்துகொள்ளும் ஒரு சில நடிகர்களில் அஜீத்தும் ஒருவர். குடும்பத்தினருக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துகொள்பவர்.இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக