செவ்வாய், 30 ஜூலை, 2013

போப் பிரான்சிஸ்: பெண் மதபோதகர்களை உருவாக்க தேவாலயங்கள் தவறிவிட்டன ! ஓரின சேர்க்கையாளரை ஒதுக்க கூடாது

பிரேசிலியா : ஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் முழுவதுமாக ஏற்றுக் நாம் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும்.
கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் திரும்பிய போப் பிரான்சிஸ், வாடிகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெண் மதபோதகர்களை உருவாக்க தேவாலயங்கள் மறுத்துவிட்டன. ஆனால், தேவாலயங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் பெண்களின் பங்கை கட்டுப்டுத்தக்கூடாது. அதிகளவில் இருக்க வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஒருவர், ஓரினச் சேர்க்கையாளராக இருந்து, அவர் கடவுள் பக்தி உடையவராகவும், நல்ல எண்ணம் உடையவராகவும் இருந்தால், அவர்களை தீர்மானிக்க நான் யார்?
இதை கத்தோலிக்க கிறிஸ்துவம் தெளிவாக விளக்குகிறது. ஒரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் இருந்து பிரித்து வைக்கக் கூடாது, அவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.
இவ்வாறு போப்பாண்டவர் கூறினார்.

 முன்னதாக, பிரேசில் நாட்டில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் போப்பாண்டவர் கலந்து கொண்டார். ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த பிரமாண்ட பிரார்த்தனையில் போப் பேசுகையில், ஆர்வம், புத்தாக்கம், சந்தோஷம் என ஆர்ப்பரிக்கும் இளைஞர்களின் கையில்தான் எதிர்காலம் உள்ளது. இளைஞர்களின் எண்ணங்களை தேவாலயங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று போப் கூறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக