செவ்வாய், 23 ஜூலை, 2013

கொல்லப்பட்டதாக கருதப்பட்ட பெண் கணவனும் காதலனும் வேண்டாம் பெற்றோருடன் இருந்து விடுகிறேன்

சென்னை: கணவனும் வேண்டாம், காதலனும் வேண்டாம். பெற்றோருடனே இருந்து விடுகிறேன் என்று கொல்லப்பட்டதாக கருதப்பட்டு திரும்பிய
பதற்றமடைந்த அவர், திருநின்றவூர் போலீசில் புகார் செய் தார். இதுபற்றி 2 நாட்களுக்கு பிறகே திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிந்து  மாயமான கங்காதேவியை தேடி வந்தனர்.இந்நிலையில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் பிணம் கிடந்தது.

இளம்பெண் கங்காதேவி போலீசில் தெரிவித்தார்.திருநின்றவூரை சேர்ந்தவர் கங்காதேவி (27). இவருக்கும் திருவான்மியூரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் 2005ல் திருமணம் நடந்தது. கடந்த 13ம் தேதி மதியம் 1 மணிக்கு, சரவணனை தொடர்பு கொண்ட கங்காதேவி திருநின்றவூர் செல்வதாக கூறினார்.  இது குறித்து திருநின்றவூரில் உள்ள கங்காதேவி யின் சகோதரர் சுகுமாரு க்கு சரவணன் தெரிவித் தார்.இந்நிலையில் மதியம் 2.40 மணிக்கு சுகுமாரை தொடர்பு கொண்ட கங்காதேவி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தன்னை கார்த்திக் என்பவர் அடித்து கடத்திச்செல்வதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

 இது குறித்த செய்தியை படித்த தனியார் பள்ளி ஆசிரியை திலகவதி என்பவர், காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று, சென்னை திருநின்றவூரில் வசிக்கும் தனது உறவினர் மகள் கங்காதேவியை காணவில்லை. எனவே அந்த சடலத்தை பார்க்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து கங்காதேவியின் கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் வாலாஜா அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பார்த்தனர். மூக்குத்தி, சிகப்பு கலர் கயிறு, முருகன் டாலர், புடவை போன்ற சில அடையாளங்களை வைத்து அது கங்காதேவி தான் என்று அவர்கள் உறுதி செய்தனர். திருவான்மியூர் மற்றும் காவேரிப்பாக்கம் போலீ சார் இணைந்து விசாரித்தபோது, கங்காதேவிக்கும் திருநின்றவூரை சேர்ந்த சந்தானம் மகன் கார்த்திக் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது. கங்காதேவியை விட கார்த்திக் 4 வயது இளையவர். இதனால் ஆத்திரம் அடைந்த கங்காதேவியின் தந்தை ரவிச்சந்திரன், கார்த்திக்கை கண்டித்தார். கங்காதேவி மாயமான நாளிலிருந்து கார்த்திக்கும் வீட்டுக்கு வரவில்லை. எனவே  கார்த்திக்தான்  கங்காதேவியை கடத்தி கொலை செய்திருப்பார் என்று போலீசார் முடிவுக்கு வந்தனர்.

 கார்த்திக்கை தேடினர்.இந்நிலையில் ரவிச்சந்திரன் செல்போனில் தொடர்பு கொண்ட கங்காதேவி, தான் கோவையில் தங்கியிருப்பதாகவும், கார்த்திக் தன்னை கடத்தவில்லை என்றும், நாங்கள் இருவரும் விரும்பிதான் கோவைக்கு வந்தோம். சரவணனுடன் வாழ எனக்குப்பிடிக்கவில்லை. கார்த்திக்கோடுதான் இருப்பேன். எங்களை யாரும் தேட வேண்டாம். போலீசில் சொல்ல வேண்டாம். நிம்மதியாக வாழ விடுங்கள் என்று அழுதபடி கூறியுள் ளார். குரல் மூலம் அடை யாளம் கண்ட ரவிச்சந்திரன் இதுகுறித்து திருவான்மியூர் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.இந்நிலையில் கங்காதேவி கொலை தொடர்பாக படத்துடன் செய்தி வெளியானது. இதை கார்த்திக்& கங்காதேவி தங்கியிருந்த ஓட்டலில் இருந்தவர்கள் படித்து அவர்களிடம் சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் நொந்துபோன இருவரும், நேற்றுமுன்தினம் இரவு கோவையிலிருந்து புறப்பட்டு நேற்று காலை சென்னைக்கு வந்தனர். திருநின்றவூர் வந்த கங்காதேவி தனது வீட்டுக்கும் கார்த்திக் அவரது வீட்டுக்கும் சென்றனர். இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார். இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து போலீசார் விசாரித்தனர்.

 கங்காதேவி யின் பெற்றோரும் அறிவுரை கூறினர்.இதையடுத்து கங்காதேவி போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறியதாவது: எனக்கும் சரவணனுக்கும் திருமணம் ஆகி 8 வருடங்களாகியும் குழந்தை இல்லை. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நிம்மதியில்லை என்பதால் கார்த்திக்குடன் சென்றேன். ஆனால் வேறு பெண்ணின் உடலை பார்த்து நான் என்று நினை த்து விட்டனர். மேலும் கார்த்திக்கை தேடுவதாக அறிந்தேன். அதனால்தான் இருவரும் சென்னைக்கு வந்தோம். நானும் சரவணனும்தான் சந்தோஷமாக இல்லை. கார்த்திக்குடனாவது சந்தோஷமாக இருக்கலாம். எனது கணவரும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கட்டும் என்ற நினைப்பில்தான் சென்றேன். ஆனால் எனது பெற்றோர், வயது குறைந்த பையனுடன் காதலா என்று கேட்டனர். என்னால் யாருக்கும் எந்த தொந்தரவும் வேண்டாம், சரவணனும் வேண்டாம். கார்த்திக்கும் வேண்டாம். என் பெற்றோருடன் செல்கிறேன்.  இவ்வாறு கதறி அழுதபடி கூறினார்.இதைக்கேட்ட போலீ சார், அவரை சமாதானம் செய்து, அவரது மாமா ஜானகிராமனுடன் அனுப்பி வைத்தனர்.  ஸ்டேஷனில் காத்திருந்த கணவனும், காதலனும், கங்காதேவியின் முடிவால் நொந்து போய் வீடு திரும்பினர்.   dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக