செவ்வாய், 23 ஜூலை, 2013

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உயிர்ப்பிக்க அறிவுறுத்தல்

அனைத்து உள்ளாட்சிகளும், அதளபாதாளத்திற்கு சென்றுள்ள, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில், மழைநீர் திட்ட கட்டமைப்புகளைபுதிதாக கட்டப்படும் கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே, பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என, நிபந்தனை திமுக ஆட்சியில் இது கிடப்பில் போடப்பட்டது. அரசு கண்டு கொள்ளாததால், உள்ளாட்சி அமைப்புகள், மழைநீர் சேகரிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்ட துவங்கின.இதனால், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்க துவங்கியது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், நீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள் வறண்டுவிட்டன. கடும் வறட்சியின் காரணமாக, மாவட்டத்தில், நிலத்தடி நீர் மட்டம், 400 அடிக்கும் கீழே சென்றுவிட்டது அதிமுக இதை மீண்டும் கையில் எடுக்காததன் காரணமே, மக்களின் ஆதரவு இல்லை என்பதே.  மக்களின் ஆதரவு இல்லாத எந்த திட்டமும் வெற்றி பெறாது. சும்மாவேனும் பத்திரிகைகாரர்கள் உசுப்பி கொண்டு இருக்கிறார்கள்.
 அரசு கண்டு கொள்ளாததால், உள்ளாட்சி அமைப்புகள், மழைநீர் சேகரிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்ட துவங்கின.இதனால், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்க துவங்கியது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், நீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள் வறண்டுவிட்டன. கடும் வறட்சியின் காரணமாக, மாவட்டத்தில், நிலத்தடி நீர் மட்டம், 400 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.மிகவும் ஆழத்தில் உள்ள நீரை, மிகவும் திறன் கொண்ட மின்மோட்டர்களை கொண்டு இறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மின்தடை அதிகமாக இருந்ததால், மின்மோட்டர்களை இயக்குவதில், சிரமம் ஏற்பட்டு, கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
விதிக்கப்பட்டது.இதனால், மழைநீர் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம், மழைநீர் சேகரமாகி, நிலத்தடி நீர் மட்டம், கோடைக் காலங்களிலும் சிறப்பாக இருந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், மழைநீர் சேகரிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
புனரமைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2001ல், மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து கட்டமைப்புகளிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என, சட்டம் இயற்றப்பட்டன. அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிபந்தனை விதிப்பு :மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டடங்களுக்கு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டது.

புனரமைக்க முடிவு :

இதை சமாளிக்கும் வகையில், சிதிலமடைந்து உள்ள மழைநீர் கட்டமைப்புக்களை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயன்படாத ஆழ்துளை கிணறுகளுக்கு அருகில், மழைநீர் தேங்கும் விதமாக, குழிகளை ஏற்படுத்தவும், அதில் சேகரமாகும் நீரை, ஆழ்துளை கிணறுகள் வழியாக நிலத்திற்கு அனுப்பவும், தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு, உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனரின் அலுவலர் ஒருவர் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களில், 4,700 ஆழ்துளை கிணறுகளும், 7,100 கைப்பம்புகளும் உள்ளன. இதில், 20 சதவீதம் அளவிற்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் கைப்பம்புகள் பழுதடைந்தும், தண்ணீரின்றி பயன்படுத்தாத நிலையில் உள்ளன.கடந்த, ஜனவரி மாதம் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், முதல்வர் பயனற்ற மற்றும் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

கடிதம்:

இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை அழைத்து, கூட்டம் போட்டு அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என, கூறியும், ஒவ்வொரு ஒன்றியத்திற்கு கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது.இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைப்பதற்கு, அந்தந்த ஊராட்சி நிர்வாகம் தான் முழுபொறுப்பு. மேலும், அதற்கான செலவுகளையும் ஊராட்சி பொது நிதியில் இருந்து, தொகை எடுத்துக் கொள்ளலாம். தற்போது, 14 ஒன்றியத்திலும், 500க்கும் குறைவான இடங்களில் தான், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ஊராட்சிகள் தான், ஓரளவுக்கு இத்திட்டம் செயல்படுத்தி வருகிறது. மற்ற ஊராட்சிகளிலும் இதை செயல்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தி வருகிறோம். விரைவில், இத்திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் கண்டிப்பாக ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
dinamalar.com

- நிருபர் குழு -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக