செவ்வாய், 23 ஜூலை, 2013

உலகின் சிறந்த டாக்சியாக இந்திய அம்பாசிடர் கார் தெரிவு

இங்கிலாந்தைச் சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கும் உலகின் தலைசிறந்த டாக்சி தொடர்பான நிகழ்ச்சியில், மற்ற தயா ரிப்புகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பெருமிதம் என்றழைக் கப்படும் அம்பாசிடர் கார் முதலிடத்தை பிடித் துள்ளது.
இங்கிலாந்து, அமெ ரிக்கா, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, மெக்சிக்கோ, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த கார்களை எல் லாம் பின்னுக்குத் தள்ளி உலகின் தலைசிறந்த டாக்சி என்ற இந்த அரிய பெருமையை அம்பா சிடர் கார் தற்போது பெற்றுள்ளது.
தொழிலதிபர் சி.கே. பிர்லாவுக்கு சொந்த மான இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம், 1948ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் ஹுப்ளி மாவட்டத்தில் அம்பா சிடர் கார்களை முதன் முதலாக தயாரித்தது.
1980ஆம் ஆண்டு மலிவு விலையில் மாருதி கார்கள் தயாரிக்கப் பட்ட பிறகு மெல்ல, மெல்ல மவுசை இழந்த அம்பாசிடர் கார்கள் இந்திய சாலைகளில் காண்பதற்கு அரிய அரும் பொருளாக மாறி விட் டது.
மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவல கங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு அம்பாசி டர் கார்கள் வலம் வந்தாலும் 2012-13ஆம் ஆண்டில் மொத்தம் 3 ஆயிரத்து 390 அம்பா சிடர் கார்கள் மட்டுமே விற்பனையாயின.
இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெறும் 709 கார்களே விற்பனையாகி உள்ளன.
இந்நிலையில், உல கின் தலைசிறந்த டாக்சி யாக அம்பாசிடர் கார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதை இந்தியருக்கு கிடைத்த கவுரவமாகவே கருத வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக