வெள்ளி, 26 ஜூலை, 2013

லோக்சபா தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டி? அப்படீன்னா காங்கிரசுக்கு கித்னா ?

வரும் லோக்சபா தேர்தலில், தொகுதிப் பங்கீடு குறித்து சூசகமாக கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்ற பொருட்பட பேசினார். அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தபோது, அதில் கலந்து கொண்டார் தி.மு.க. தலைவர்.
நிகழ்ச்சியில் மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், “2004ம் ஆண்டு, நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்” என்றார்.

பின்னர் பேசிய கருணாநிதி, “முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை. அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து, முதல் கண்டன குரல் நான் கொடுத்தேன்.
நான் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக, காதர் மொய்தீன் குறைவாக பேசினார். அதேபோல் எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு, எனக்கு, அதாவது தி.மு.க.வுக்கு அதிகமாக ஒதுக்குவதற்கு ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று சந்தடி சாக்கில் தொகுதி உடன்பாடு குறித்து முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்!
இதற்கெல்லாம் கலைஞருக்கு சொல்லியா தரவேண்டும்?
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக