வெள்ளி, 19 ஜூலை, 2013

பரிதி :பிரதமராகும் தகுதி படைத்த ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டுமே! ம்ம் நமக்கு வாய்த்த அடிமைகள்

ஸ்ரீரங்கம்: நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறார்
முதல்வர் ஜெயலலிதா. பிரதமர் பதவிக்குத் தகுதி படைத்த ஒரே தலைவர் அவர் மட்டுமே என்று ஸ்ரீரங்கத்தில் நின்று உரக்கப் பேசியுள்ளார் சமீபத்தில் திமுகவிலிருந்து அதிமுகவுக்கு இழுத்து வரப்பட்ட பரிதி இளம்வழுதி. முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடந்த சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில்தான் இப்படிப் பேசினார் பரிதி. சமீபத்தில்தான் திமுகவிலிருந்து அதிமுகவுக்குக் கொண்டு வரப்பட்டார் பரிதி. அதன் பிறகு தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், ஸ்ரீரங்கத்திலும் அவர் பேசினார். என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க இருந்த மத்திய அரசை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தி தமிழக அரசுக்கே பங்குகளை விற்க போராடி மத்திய அரசையும் முதல்வர் ஜெயலலிதா பணிய வைத்துள்ளார் இந்த பிரச்சினை மட்டுமல்ல, ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி நதி நீர் பிரச்சினையிலும் தனியாக போராடி மத்திய அரசை பணிய வைத்து சாதனை புரிந்துள்ளார்தற்போது இந்தியாவே வியந்து திரும்பி பார்க்க கூடிய அளவில் ஜெயலலிதா தனித்தன்மையோடு ஆட்சி செய்து வருகிறார்.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை வருங்காலத்தில் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டும் தான் என்பதை நாடே அறியும் என்றார் பரிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக