வெள்ளி, 19 ஜூலை, 2013

அம்மாவின் காலடியில் நாஞ்சில் சம்பத்தும் பரிதியும் தள்ளு முள்ளு

கருணாநிதியின் குடும்ப சுயநலத்தால், அறிஞர் அண்ணாவால்
உருவாக்கப்பட்ட தி.மு.க.வின் கொள்கைகளை தற்போது நடிகை குஷ்பு போன்றவர்கள் விளக்கி பேசும் அளவிற்கு தி.மு.க.வின் நிலமை சென்றுவிட்டது” என்று கூறியுள்ளார், குஸ்பு தி.மு.க.வில் இணைந்த பின்னரும் அக்கட்சியில் இருந்துவிட்டு, தற்போது அ.தி.மு.க.வில் இணைந்துள்ள பரிதி இளம்வழுதி.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் இரண்டாண்டு கால சாதனைகள் குறித்த விளக்க பொதுக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி பேசியதுபோல ஒரிஜினல் அ.தி.மு.க.வினரே பேசவில்லை.
அப்படி என்னதான் பேசினார் பரிதி?
இந்திய திரு நாட்டினையே ஆளப்போகும் சத்தியினை பெற்றுவரும் அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக என்னை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளது. 27 ஆண்டு கால சிறை வாழ்கையினை விட்டு வெளியே வந்த நெல்சன் மண்டேலோ அடைந்த மகிழ்ச்சியினை போன்று எனக்கு உள்ளது.

நீதிக்காக தனது மகனையே கொன்ற மனுநீதிசோழன் போன்றவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில், தனது மகனுக்காக இயக்கத்தையே காவு கொடுத்து வருகிறார் கருணாநிதி. அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வின் கொள்கைகளை தற்போது நடிகை குஷ்பு போன்றவர்கள் விளக்கி பேசும் அளவிற்கு தி.மு.க.வின் நிலமை சென்றுவிட்டது.
அண்ணா இறந்த பிறகு அவசர அவசரமாக கபளிகரம் செய்து பதவியினை பிடித்த கருணாநிதி, அண்ணாவின் நூல்களை கூட நாட்டுடைமையாக்கி அண்ணாவின் குடும்பத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்தின் சாவிற்கும் தி.மு.க.தான் காரணம்.
தன்னை தவிர வேறு யாருக்கும் அண்ணாவின் அறிவு பற்றி தெரிந்துவிட கூடாது (!) என்ற எண்ணத்தில் அவரது நூல்களை கருணாநிதி நாட்டுடமையாக்கவில்லை. பின்னர் முதல்வர் ஜெயலலிதா அதனை நிறைவேற்றிய போது அதை கூட குறை கூறியவர் கருணாநிதி.
தமிழக மக்கள் மூலம் பல முறை பல நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்ற கருணாநிதி தனது மருமகனுக்கும், மகனுக்கும், பேரன்களுக்கும் குறிப்பிட்ட இலக்கா மந்திரிகளை பெறுவதில் மட்டுமே குறியாக இருந்தாரே தவிர தமிழகத்தின் நலனுக்கான இலாகாக்களை கேட்டு பெறவில்லை.
இருக்கிற பணத்தை காப்பாற்றி கொள்ள நான் (பரிதி) கட்சி மாறிவிட்டதாக கருணாநிதி கூறி வருகிறார். நான் முதன் முதலாக அரசியலுக்கு வரும் போது எனக்கென்று சொந்த வீடு இருந்தது. ஆனால் கருணாநிதி எப்படி முதன் முதலில் சென்னைக்கு (திருட்டு ரயில்) வந்தவர் என்று அனைவருக்கும் தெரியும்
 தமிழ் தமிழ் என்று தமிழக மக்களை ஏமாற்றிவிட்டு தனது குடும்பத்தினரை இந்தி கற்று கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைப்பார் கருணாநிதி.
முதல்வர் ஜெயலலிதா என்.எல்.சி.யின் பங்கு விற்பனையில் மிகப் பெரிய வெற்றியினை கண்டுள்ளார். தற்போது தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்திருந்தால் தி.மு.க.வின் வாரிசு எண்டர்பிரைசஸ் கம்பெனிகளுக்கு என்.எல்.சி.யின் பங்குகள் சென்றிருக்கும். நல்ல வேலையாக தொழிலாளர்களின் நலன்கள் முதல்வர் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டுள்ளன.
தான் முதல்வராக இருந்தபோதுதான் கச்சதீவு கையை விட்டு போனது என்பதை மறந்து விட்டு தற்போது அதனை மீட்பேன் என்று கூறுவது கருணாநிதிக்கு ஞாபக மறதி நோய் வந்துவிட்டது என்பதைதான் காட்டுகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சனை கச்சதீவு பிரச்சினை போன்றவைகளை முதல்வர் ஜெயலலிதாவினால் மட்டுமே தீர்க்க முடியுமே தவிர எந்த ஒரு காலத்திலும் கருணாநிதியால் தீர்க்கவே முடியாது.
காவிரிச் பிரச்சனை, என்.எல்.சி. பங்கு என்று அனைத்திலும் வெற்றிகண்டு தமிழக மக்களுக்காக ஆட்சி செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து டெல்லி செங்கோட்டைக்கு நாட்டின் பிரதமராகும் நாள் நெருங்கிவிட்டது” என்றார் பரிதி.
கட்சியில் இணைந்தபின், அ.தி.மு.க. மேடைகளில் நாஞ்சில் சம்பத்துக்கு சவாலாக இருந்துவரும் பரிதி, தற்போதெல்லாம் நாஞ்சில் சம்பத்தைவிட நன்றாகவே அடித்து ஆடுகிறார். நாஞ்சில் அண்ணே… கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும், இன்னோவா காரும் ஜாக்கிரதை.
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக