சனி, 27 ஜூலை, 2013

ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது

ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் ஆகிய ஐந்து நடிகைகள் காதலில் சிக்கியுள்ளனர். இதில் சிலருக்கு திருமண ஏற்பாடுகள்
நடக்கிறது. ஹன்சிகா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் ரிலீசான தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2 படங்கள் வெற்றிகரமாக ஓடின. இந்த நிலையல் சிம்புவுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் காதலை பகிரங்கமாக அறிவித்து உள்ளனர். சிம்பு உடனடியாக திருமணம் செய்து கொள்ள அவசரப்படுகிறார் என்கின்றனர். ஹன்சிகாவோ ஐந்து வருடத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார். சமந்தாவும், சித்தார்த்தும் காதல் வயப்பட்டு உள்ளனர்.
இருவரும் கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளனர். சமந்தா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வருகிறார். லட்சுமி ராயும் காதலில் விழுந்துள்ளார். அவர் கூறும் போது, நான் காதலிக்கிறேன். அவர் தொழில் அதிபராக இருக்கிறார். அவரைப்பற்றி வேறு விஷயங்கள் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார். அமலாபாலும் முன்னணி டைரக்டர் ஒருவரை காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியாகியுள்ளன.
அது பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் ரகசியமாக சந்தித்து காதல் வளர்ப்பதாக கூறுகின்றனர். காஜல் அகர்வாலுக்கும், தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல், பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளை சமீபத்தில் புறக்கணித்து விட்டார். தயாரிப்பாளரை மணப்பதற்காகவே சினிமாவில் நடிப்பதை குறைப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக