சனி, 27 ஜூலை, 2013

ஆந்திராவை பிரித்து 'ராயல தெலுங்கானா'வை உருவாக்க காங்கிரஸ் முடிவு?

HYDERABAD: The signals from the corridors of power indicate that not only does the Congress leadership want to solve the Telangana issue for good, but also wants to ensure that no more demands for division
emerge from the region.
It is with this objective in mind that the Congress is seriously considering the proposal of splitting Rayalaseema vertically and merging the districts of Anantapur and Kurnool with Telangana to form Rayala-Telangana . டெல்லி/ஹைதராபாத்: ஆந்திர அரசியலில் தெலுங்கானா விவகாரத்தின் கிளைமாக்ஸ் எப்போது? என்ன முடிவாக இருக்கும்? என்ற திக் திக் நிமிடங்கள் இப்போது.. தேர்தல்களை கருத்தில் கொண்டு மிகத் தெளிவாக லாபம் கிடைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து முடிவு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலமானது தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய மூன்று பகுதிகளாக உள்ளன. தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தாக வேண்டும் என்பது அரை நூற்றாண்டுகாலமாக நடந்து வரும் போராட்டம். இது தொடர்பாக காங்கிரஸ் விரைவில் முடிவு அறிவிக்க இருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற இறுதி ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானாவை உருவாக்கி பிற பகுதியின் எதிர்ப்பை சம்பாதிப்பதற்கு பதிலாக மாற்று திட்டத்தை அறிவிக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.
தெலுங்கானாவின் 10 மாவட்டங்களையும் ராயலசீமாவின் பின்தங்கிய மாவட்டங்களான கர்நூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களையும் ஒன்றிணைத்து 'ராயல தெலுங்கானா' என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவது எனவும் ஆந்திராவுக்கும் ராயல தெலுங்கானாவுக்கும் பொதுதலைநகராக ஹைதராபாத் செயல்படும் என அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் கூட இருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் ராயல தெலுங்கானா பற்றி விவாதித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக