திங்கள், 15 ஜூலை, 2013

வழக்குகளுக்கு பயந்து பாகிஸ்தான் திரும்ப சர்தாரி தயக்கமா?

வழக்குகளுக்கு பயந்து பாகிஸ்தான் திரும்ப சர்தாரி தயக்கமா? அதிபர் அலுவலகம் மறுப்பு
பாகிஸ்தானில் கடந்த 2008ம் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோது, அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது 5 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து சமீபத்தில் துபாய் சென்ற சர்தாரி, அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளார். < இந்நிலையில் ஊழல் வழக்குகளுக்குப் பயந்து அவர் வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பதவிக்காலம் முடியும்வரை அவர் லண்டனிலேயே தங்கியிருப்பார் என்றும் செய்திகள் பரவின. இந்த தகவலை அதிபரின் செய்தித் தொடர்பாளர் பர்காத்துல்லா பாபர் மறுத்துள்ளார். அதிபர் சர்தாரி நிச்சயம் நாடு திரும்புவார். பதவிக்கலம் முடியும் வரை அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். 2-வது முறையாக அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டார் என்றும் பாபர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக