சனி, 27 ஜூலை, 2013

மானாட மயிலாட புகழ் கீர்த்தியை மணக்கும் சாந்தனு

சாந்தனு பாக்யராஜ் மானாட மயிலாட புகழ் கீர்த்தியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இயக்குனர், நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் ஹீரோவானார்.
அவர் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அவர் தற்போது வாய்மை, அமளி துமளி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாந்தனுவுக்கும் மானாட மயிலாட புகழ் கீர்த்திக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறதாம். கீர்த்தியின் அம்மா ஜெயந்தி ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.
அங்கு சாந்தனு அடிக்கடி செல்வாராம். அப்போது தான் கீர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். வாழ்த்துக்கள் சாந்தனு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக