வியாழன், 25 ஜூலை, 2013

Bihar பள்ளி முதல்வர் மீனாதேவி கைதுசெய்யப்பட்டார் ! 23 குழந்தைகள் இதுவரை பலியாகியுள்ளனர்

கடந்த 16-ம் தேதி பீகாரில் சாப்ரா மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மதிய உணவில் பருப்பு, சாம்பார் உள்ளிட்டவை பரிமாறப்பட்டது. இதனை
உட்கொண்ட பள்ளி குழந்தைகள் வாந்தி எடுத்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அடுத்தடுத்து 23 குழந்தைகள் பலியாயினர். பலர் பாதிக்கப்பட்டனர். மதிய உணவில் பூச்சி கொல்லி மருந்து கலக்கப்பட்டிருந்தது தடயவியல் சோதனையில் தெரியவந்தது.இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் மீனாதேவி, அவரது கணவனர் ஆகியோர் திடீரென தலைமறைவாகினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாப்ரா மாவட்ட கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடியானது.இந்நிலையில் பள்ளி முதல்வர் மீனாதேவி ராபிள் கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள மீனாதேவி கணவர் அர்ஜூன் பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக