வியாழன், 25 ஜூலை, 2013

கவிஞர் வாலியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத ADMK

திமுக தலைவர் கலைஞர் 24.07.2013 புதன்கிழமை கேள்வி பதில் வடிவிலான
அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார். அதில்,கேள்வி:- காவியக் கவிஞர் வாலியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க. சார்பில் யாருமே வந்ததாகத் தெரிய வில்லையே? கலைஞர் :- கவிஞர் வாலி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டியவர். இன்றையமுதலமைச்சர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போது, வார இதழ் ஒன்றில்“ரெங்கநாயகி” என்ற தலைப்பிலே கவிதை பாடியவர். அவர் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர். அனைவரிட மும் அன்பாகப் பழகக்கூடியவர். அவர் மறைந்த நிகடிநச்சிக்கு அ.தி.மு.க.வினர் யாரும் வரவில்லை என்றால், அதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக