புதன், 31 ஜூலை, 2013

உத்தரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் ! மாயாவதி பழைய பல்லவியை மீண்டும் இசைக்கிறார்

லக்னோ: ஆந்திராவை பிரித்தது போல உத்தரப்பிரதேச மாநிலத்தை 4 சிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, சிறிய மாநிலங்கள் உருவாக்குவதற்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளோம். தற்போதைய நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். பூர்வாஞ்சல், புந்தெல்காண்ட், ஆவத் பிரதேசம், பஸ்சிம் பிரதேசம் என 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி அதிகரிக்கும். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்த 4 மாநிலங்கள் உருவாக்குவதற்காக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றார்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக