செவ்வாய், 2 ஜூலை, 2013

பெண்களில் 40 சதவீதத்தினர் கணவரால் கொல்லப்படுகின்றனர் ! W.H.O அதிர்ச்சி தகவல்

லண்டன்:உலகம் முழுவதும் குடும்பத்தினரின் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 3 ல் ஒருவர் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனம்
அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் மார்கரெட் சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலகம் முழுவதும் வன்முறைக்கு இலக்காகும் பெண்களில் 40 சதவீதம் பேர் தங்களது கணவன்களால் கொல்லப்படுகின்றனர். வெளி நபர்களை விட அதிகமாக தங்களது கணவன்களால் 7 சதவீதம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். 1983 முதல் 2010 வரை நடத்தப்பட்ட ஆய்வில் 30 சதவீதம் பெண்கள் குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறை மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 37 சதவீதம் பெண்களும், தென் அமெரிக்க நாடுகளில் 30 சதவீதம் பேரும், ஐரோப்பா, ஆசிய நாடுகளில் 25 சதவீதம் பெண்களும் இது போல் குடும்ப வன்முறைகளுக்கு இலக்காகின்றனர். இவற்றில் 86 நாடுகளில் ஆய்வு நடத்தியதில் 15 வயதிற்கும் குறைவான சிறுமிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் வரதட்சணை, காதல் போன்ற காரணங்களால் பெண்கள் கௌரவ கொலைக்கும் ஆளாகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக