புதன், 31 ஜூலை, 2013

புதிதாக 15 தனிமாநில கோரிக்கைகள் எழும் சாத்தியம் வலுக்கிறது !

நாக்பூர்:தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள்
அதிகரித்துள்ள நிலையில், அது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நீண்ட காலமாக போராடி வரும், பல மாநில குழுக்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன. அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமானால், இந்தியா, இன்னும், 15 மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டியிருக்கும். தெலுங்கானா உதயம்:ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நீண்ட காலமாக போராடி வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தெலுங்கானா மாநில அறிவிப்பு, @நற்று வெளியாகியுள்ளது.இந்நிலையில், தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்தி, மேற்கு வங்கத்தில், கூர்க்கா இன மக்கள்; அசாமில் போடா பழங்குடியின மக்கள்; மகாராஷ்டிராவில் விதர்பா பகுதி மக்கள்; பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
போராட்டம் தீவிரம் அடைந்தால், தெலுங்கானா உருவாவது போல், தங்களின் கோரிக்கையும் ஏற்கப்படும் என, அக்குழுக்கள் நம்புகின்றன.இப்போதுள்ள நிலையில், 15 புதிய தனி மாநில கோரிக்கைகள், பேச்சளவில் உள்ளன என்பதை அறியும் போது, ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கும், தனி < மாநில கோரிக்கைகளை முளையிலேயே கிள்ளாமல் விட்ட அவர்களின் அசட்டையும் தெரிய வருகிறது.

பூர்வாஞ்சல்:உத்தர பிரதேசத்தை பிரித்து, உத்தரகண்ட் மாநிலம் ஏற்கனவே, 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலை யில், பூர்வாஞ்சல் மற்றும் ஹரித் பிரதேசம் என, மேலும் இரு மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.அது போல், பீகாரை பிரித்து, ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், "மிதிலா' என்ற பெயரில், தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, அங்கு நிலுவையில் உள்ளது.தனி மாநிலம் கோரி, அசாம் மாநிலத்தில் பல தீவிரவாத குழுக்கள் போராடி வரும் நிலையில், "போடோலாந்து' மற்றும்,"திமாரஜி' என, இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று, அப்பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது.அது போல், மேற்கு வங்கத்தை பிரித்து, கூர்க்காலாந்து, மணிப்பூரை பிரித்து குகிலாந்து, மத்திய பிரதேசத்தை பிரித்து, விந்திய பிரதேசம் என, 15 புதிய, தனி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சில குழுக்கள் போராடி வருகின்றன.இந்த கோரிக்கைகள், துவக்கத்தில், மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட குழுக்களால் தான் எழுப்பப்படுகின்றன. அரசியல்வாதிகள், தூண்டி விடுவதால், கோரிக்கை வலுத்து, ஒரு கட்டத்தில் மாநிலங்கள் துண்டாடப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. விதர்பா மாநிலம் கிடைக்குமா?
மகாராஷ்டிராவை பிரித்து, "விதர்பா' மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீண்ட காலமாக போராடி வந்துள்ளனர். இது பற்றி, பாரதிய ஜனதா முன்னாள் எம்.பி., பன்வரிலால் புரோஹித் கூறும் போது, ""1992ல், புவனேஸ்வரில் நடந்த, பா.ஜ., செயற்குழு கூட்டத்திலேயே, விதர்பா மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; தெலுங்கானாவுக்கு அனுமதி கொடுத்தால், விதர்பாவையும் உருவாக்க வேண்டும்,'' என்கிறார்.ராஜிவ் பிரதமராக இருந்த போது, விதர்பா மாநிலம் உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய, அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த, பி.ஏ.சங்மாவை கேட்டுக் கொண்டார். சங்மாவும், பல மாதங்கள் அப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதகமான அறிக்கை அளித்தார் என கூறப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி., விலாஸ் முட்டம்வார், காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு கடிதம் எழுதி, "விதர்பா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும்' என, கேட்டுள்ளார்.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தை பிரித்து, கூர்க்காலாந்து மாநிலம் உருவாக்க கோரி, ஜி.ஜே.எம்., என்ற அமைப்பு, மூன்று நாட்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, இரண்டாவது நாளாக நேற்று, வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக