திங்கள், 29 ஜூலை, 2013

ராஜ்யசபா சீட் ரூ100 கோடி வரை 'விற்பனையாகிறது

ஒரு ராஜ்யசபா சீட் ரூ100 கோடி வரை 'விற்பனையாகிறது' என்ற உண்மையை போட்டுடைத்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா
எம்.பி.யுமான ஹரியானாவின் பைரேந்தர் சிங். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராகவும் இருந்தவர் பைரேந்தர் சிங். அவர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஒரு ராஜ்யசபா சீட் விலை ரூ100 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபர் ரூ100 கோடி வரை கொடுக்க தயாராக இருந்தார். கடைசியில் ரூ80 கோடிக்கு அவர் வாங்கினார். இந்த மாதிரி ரூ100 கோடிக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் வாங்கியவர்களைப் பற்றி எனக்கு தெரியும். இப்படி ராஜ்யசபா சீட் வாங்குகிறவர்கள் மக்களுக்காக எதுவும் செய்வதும் இல்லை என்று கூறினார். பைரேந்தர் சிங்கின் இக் கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக