|
S.Saravana perumal |
அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட,
கழுத்தில் இதர
வழக்குகளில் இருந்து, அவர்
விடுவிக்கப்பட்டபோதும், தங்க கடத்தல் தொடர்பாக, "கஸ்டம்ஸ்' துறை தொடர்ந்த
வழக்கும், அதற்கு எதிராக, அவர் செய்த மேல்முறையீடும், சுப்ரீம் கோர்ட்டில்
நிலுவையில் உள்ளன.இதனால், அவரது வேட்பு மனு, பரிசீலனையின்போது தள்ளுபடி
செய்யப்படவாய்ப்புள்ளது. மனு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அவர், ஆறு ஆண்டு
பதவிக்காலத்தை முழுமையாக அனுபவிக்க முடியுமா? என்ற சட்டச்சிக்கல் உள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவர் மீதான வழக்கு விவரம் குறித்து,
தலைமைக்கு, கட்சி நிர்வாகிகள், ஏராளமான, "பேக்ஸ்' அனுப்பினர். இது குறித்து
விசாரித்து அறிக்கை தர, உளவுத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.பின்னர்,
தூத்துக்குடியிலிருந்து, சென்னைக்கு அவசரமாக வரவழைக்கப்பட்ட, சரவண
பெருமாளிடம், நேற்றுமுன்தினம் இரவு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததும்,
அவரது பெயர், வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது
; மாணவர் அணி
செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.இது தொடர்பாக கருத்து கேட்க,
சரவணபெருமாளை தொடர்பு கொண்ட போது, அவரது மொபைல், "ஸ்விட்ச் ஆப்'
செய்யப்பட்டிருந்தது.
ருத்திராட்சமும், நெற்றியில் குங்குமப் பொட்டும் அணியும் வழக்கம்
கொண்ட, சரவண பெருமாள், திடீரென மாற்றப்பட்டதற்கு, அவர், "கஸ்டம்ஸ்'
மற்றும், "பெரா' வழக்குகளில், சிக்கியதே காரணம், என்பது தெரிய வந்துள்ளது.கடந்த,
2001 சட்டசபை தேர்தலில், நெல்லை அ.தி.மு.க., வேட்பாளர், நயினார்
நாகேந்திரனை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிட்டு தோற்ற, கட்சிக்காக,
பெரிதாக எதையும் செய்யாத, சரவண பெருமாள், ராஜ்யசபா வேட்பாளராக
அறிவிக்கப்பட்டது, கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.முற்பட்ட
சமூகத்தை சேர்ந்த அவரை, ராஜ்யசபாவுக்கு அனுப்பினால், லோக்சபா தேர்தலில்,
அவர் சார்ந்த சமுதாய ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் எனக் கூறி,
மூத்த அமைச்சர் ஒருவர் சிபாரிசு செய்ததால், சரவண பெருமாள் வேட்பாளர் ஆனார்.
அவர் மீதான வழக்குகள் குறித்து, தூத்துக்குடி மாவட்ட உளவுத் துறையும்,
தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
வழக்கு:
தூத்துக்குடியிலிருந்து,
வெளிநாடுகளுக்கு கப்பலில், தங்கம், வெள்ளி, போதைப்பொருள் கடத்திய
வழக்குகளில், அவர் சிக்கியுள்ளார். "காபிபோசா' சட்டத்திலும் கைதாகி, சிறை
தண்டனை அனுபவித்துள்ளார்.
ஐகோர்ட்டில் சரவணபெருமாள் மனு தள்ளுபடி :
இதற்கிடையில்,
வெள்ளிக்கட்டிகள் கடத்தல் வழக்கில், அன்னிய செலவாணி சட்டத்தில் (பெரா),
கீழ் கோர்ட்டில் பதிவான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி, சரவண
பெருமாள், தாக்கல் செய்த மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி
செய்தது.வெளிநாட்டிலிருந்து, வெள்ளிக் கட்டிகள், கடல் வழியாக கடத்தி
வரப்படுவதாக, தூத்துக்குடி "கஸ்டம்ஸ்' அதிகாரிகளுக்கு, 1989 செப்., 27 ல்
தகவல் கிடைத்தது. அன்று இரவு, 10:00 மணிக்கு, கிண்ணக்காயல் மற்றும்
முக்கானி இடையே, கடற்கரை வண்டிப்பாதையில், பெட்டிகளில், வெள்ளிக்கட்டிகளை
ஏற்றி வந்த, இரண்டு மாட்டு வண்டிகளை, "கஸ்டம்ஸ்' அதிகாரிகள் மடக்கினர்.
அவர்கள் மீது மர்ம கும்பல், தாக்குதல் நடத்தியது; நாட்டு வெடிகுண்டுகளை
வீசியது. சில அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். அக்கும்பலிடம், இரண்டு
அதிகாரிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களை, கும்பல் தாக்கியது. தப்பிய
அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில்,
வெள்ளிக்கட்டிகளை புதைத்து வைத்திருக்கலாம் எனக் கருதி, "கஸ்டம்ஸ்'
துறையினர் அங்கு தோண்டினர். இரண்டு பெட்டிகளில், 113 வெள்ளிக்கட்டிகள்
இருந்தன. எடை 3,578 கிலோ. மதிப்பு, 2.50 கோடி ரூபாய்.
இது
தொடர்பாக, சரவணபெருமாள் உட்பட, 10 பேர் வீடுகளில், சோதனை நடத்தினர். ரவி
கோரேரா என்பவர் உட்பட சிலர் மீது, ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிவு
செய்தனர். ஸ்ரீ வைகுண்டம் கோர்ட்டில், 25 பேர் மீது குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்தனர். சாட்சிகள், பிறழ்சாட்சிகளாக மாறியதால், 25 பேரையும்,
ஸ்ரீவைகுண்டம் கோர்ட், 1995 ல் விடுவித்தது.சரவண பெருமாள், சேவியர்
பெர்னாண்டோ மீது, சுங்கச் சட்டம், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம்
(பெரா) மற்றும் அரசுப் பணியாளர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல் பிரிவுகளில்,
நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, தூத்துக்குடி, "கஸ்டம்ஸ் உதவி கமிஷனர்,
2003 டிச.,22 ல் மதுரை கூடுதல் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில்
புகார் செய்தார். இதை, 2004 ல் நீதிபதி விசாரணைக்கு ஏற்று,
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
இதை
எதிர்த்து சரவண பெருமாள், சேவியர் பெர்னாண்டோ, மதுரை ஐகோர்ட் கிளையில்,
2007 ல் தாக்கல் செய்த சீராய்வு மனு:அன்னிச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம்
(பெரா), 2002 ல், அன்னியச் செலாவணி பராமரிப்புச் சட்டமாக (பெமா)
மாற்றியமைக்கப்பட்டது. "பெரா' நடைமுறையில் இல்லை. எங்கள் மீது, "பெரா'வின்
கீழ் குற்றச்சாட்டை பதிவு செய்ய முடியாது. சம்பவம், 1989 ல் நடந்தது.
தாமதமாக புகார் செய்துள்ளனர். குற்றச்சாட்டுகள் பதிவு செய்ததை ரத்து செய்ய
உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டனர்.
இம்மனு,
நீதிபதி, ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. "கஸ்டம்ஸ்'
சார்பில் வக்கீல் வடிவேல்சேகர் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி,
"மனுதாரர்கள் கருத்தை, கீழ் கோர்ட் விசாரணையின்போது தெரிவித்திருக்கலாம்.
இதை சீராய்வு மனுவாக ஏற்க முடியாது. ஐகோர்ட் பதிவுத்துறை, வழக்கு ஆவணங்களை,
ஜூன், 17 க்குள், கீழ் கோர்ட்டிற்கு அனுப்ப வேண்டும். கீழ் கோர்ட்
நீதிபதி, ஜூன், 21 முதல், தினமும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, விரைவில்
தீர்ப்பளிக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என
உத்தரவிட்டார்.அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக போட்டியிட
முடியாமல் போனதற்கு இந்த நிலுவை வழக்கும் ஒரு காரணம் ஆகும்.
- நமது சிறப்பு நிருபர்
அடேய் இது மைத்ரேயன் டா
பதிலளிநீக்குநன்றி அன்பரே .தற்போது இத்தவறை திருத்தி உள்ளேன்
பதிலளிநீக்குSaravana perumal annachi
பதிலளிநீக்கு