வியாழன், 20 ஜூன், 2013

'WhatsApp'-ஐ தடை செய்யும் செளதி அரேபியா

Saudi Arabia is considering blocking access to messaging app WhatsApp 
.ரியாத்: செளதி அரேபியா அரசு இன்னும் சில வாரங்களில் வாட்ஸ்ஆப்-ஐ தடை செய்ய திட்டமிட்டுள்ளது. செளதி அரேபியா தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணையம் வைபருக்கு இந்த மாதம் தடை விதித்தது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்-புக்கும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் ஆப் மூலம் மக்கள் செலவின்றி தகவல்களை பரிமாறிக் கொள்வதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் சவூதி அரசு இன்டர்நெட், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை விதிக்க முயல்கிறது. வைபர், வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப் உள்நாட்டு விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படி விதிகள் மீறப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சவூதி தொலைத்தொடர்பு ரெகுலேட்டர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யுமாறு வாட்ஸ்ஆப்புக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. இதையடுத்து வாட்ஸ்ஆப் பதில் அளிக்காவிட்டால் வரும் ஜூலை மாதம் 9ம் தேதிக்குள் அதற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக