வியாழன், 6 ஜூன், 2013

Viagra வயக்ரா மாத்திரையின் காப்புரிமை முடிகிறது ! இனி மலிவு விலை

லண்டன் : ஆண்மை ஊக்கி மருந்தான வயாக்ராவின் காப்புரிமை, இங்கிலாந்தில் வரும் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு குறைந்த விலையில், உள்நாட்டு நிறுவனங்களின் மருந்துகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனம் பைசர். இதன் முக்கியமான தயாரிப்பை சொன்னால்தான், அதன் பெருமை புரியும். உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டு வரும் வயாக்ரா மாத்திரையை தயாரிப்பது இந்நிறுவனம்தான். ஆண்களின் வயது, உடல்வாகைப் பொருத்து அவர்களின் ஆண்மை ஊக்கிக்காக பல்வேறு அளவுகளை கொண்ட வயாக்ரா மாத்திரை அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் இந்த மாத்திரை ஒன்றின் விலை ஸி730. விலை அதிகமாக இருந்தாலும், செயல்திறன் அதிகம் எனறு இதை பயன்படுத்திய அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆறு நொடிக்கு ஒரு மாத்திரை வீதம் வயாக்ரா விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டில் இந்த மாத்திரை, மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அப்போதே குறைவான சக்தி கொண்ட (50 மி.கி) மாத்திரை ஸி463க்கும், 100 மி.லி. மாத்திரை ஸி594க்கும் விற்கப்பட்டது. இப்போது இதன் விலை அதிகரித்துவிட்டது. வயாக்ராவுக்கான காப்புரிமையை (பேடன்ட்) பைசர் நிறுவனம் பெற்றுள்ளது. முக்கிய நாடுகள் அனைத்திலும் இதை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்திலும் இந்நிறுவனம் தன்னுடைய காப்புரிமையை பதிவு செய்துள்ளது. இது வரும் 21ம் தேதியுடன் முடிகிறது. இதுதான் பைசர் நிறுவனத்துக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.

ஏனெனில், காப்புரிமை முடிந்த பின்னர் வேறு எந்த நிறுவனமும் இதே மருந்துகளை கொண்ட மாற்று மருந்துகளை வெவ்வேறு பெயர்களில் விற்க முடியும். இங்கிலாந்தில் வயாக்ரா விலை அதிகமாக இருந்ததாலும், காப்புரிமை காரணமாக மற்ற நிறுவனங்கள் மருந்தை அறிமுகம் செய்ய முடியவில்லை. வயாக்ராவின் காப்புரிமை முடிந்தபின்னர், இங்கிலாந்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்கள் குறைந்தவிலை ஆண்மை ஊக்கி மருந்துகளை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளன. இதன் விலை வெறும் ரூ.50க்குள்தான் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்  dinarakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக