செவ்வாய், 11 ஜூன், 2013

வி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ! VC Shukla: The man who banned Kishore Kumar

இந்திராவின் எமெர்ஜென்சி நாட்களின் அதிகாரத்தின் உச்சியில் இருந்தவர், சஞ்சய் காந்தியுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி மீடியாக்களை  பயமுறுத்தியவர் . நவீன கோயபெல்ஸ்  என்ற பட்டம் அன்று வாங்கியவர் , ஒருவர் இறந்த பின் அவரை பற்றி நல்ல விடயங்களை பேசுவதே நம் பண்பு , இருந்தாலும் வரலாற்றை மறக்க முடியாதல்லவா ? காங்கிரஸ் மேடையில் பாட மறுத்த காரணத்திற்காக இந்தியாவின் ஒப்பற்ற பாடகர் கிஷோர் குமாரின் பாடலுக்கு தடை விதித்த செயலை எதற்கு ஒப்பிடுவது Shukla banned songs of Kishore Kumar from AIR and Doordarshan from May 4, 1976 till the end of the Emergency. Reason: Kishore had refused to sing at a Congress rally in Mumbai.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த 25-ந் தேதி மாவோ யிஸ்டுகள் தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது உடலில் 3 குண்டுகள் பாய்ந்ததால் கவலைக் கிடமான நிலையில் இருந்தார்.

இதற்காக விமானத்தில் டெல்லி அருகே குர்கான் கொண்டு செல்லப்பட்டு மெஜந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேசன் மூலம் குண்டுகள் அகற்றப்பட்டன. மூச்சு திணறல் ஏற்பட்டு தொடர்ந்து அபாய கட்டத்தில் இருந்ததால் மருத்துவ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது.
இந்த நிலையில் அவரது சிறுநீரகங்கள் செயல் இழந்ததால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. தொடர்ந்து அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவ கருவிகள் உதவியுடன் அவரை கண்காணிப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக