செவ்வாய், 11 ஜூன், 2013

ஆறுமாதமாவது பிரதமராக இருக்க விடுங்களேன் என்று அத்வானி கெஞ்சினார் ! விரக்தியில் ராஜினாமா

டெல்லி: தன்னை 6 மாதம்வரை பிரதமராக இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை அத்வானி பாஜக தலைமைக்கு விதித்ததாகவும், அதை பாஜக தலைமை ஏற்க மறுத்ததால்தான் கோபமடைந்து அவர் ராஜினாமா முடிவை அறிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. தனது கோரிக்கைகளை பாஜக தலைமை நிராகரித்ததால் விரக்தி அடைந்து அவர் ஒட்டுமொத்தமாக பாஜக பதவிகள் அனைத்தையும் துறக்க முன்வந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது. ஞாயிற்றுக்கிழமையே தனது ராஜினாமா கடிதத்தை அத்வானி எழுதிவிட்டாராம். அதை கட்சித்தலைமைக்கும் தனது ஆதரவாளர்கள் மூலமாக தெரிவித்துள்ளார். ஆனால் கட்சித் தலைமை அதை நிராகரித்ததால் கோபமடைந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டாராம்.
மேலும் அத்வானி விவகாரம் தொடர்பாக கோவாவில் தேசிய செயற்குழு நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாஜக கட்டு்பபாட்டு அறையில் தலைவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் மூண்டதாம். ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அனந்தகுமார், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் இந்த விவாதத்தில் கல ந்து கொண்டனராம். கிட்டத்தட்ட ஒரு போர்க்களம் போல கட்டுப்பாட்டு அறை காணப்பட்டதாக கூறுகிறார்கள்.
மோடிக்கு என்னபதவி கொடுக்கப்பட்டாலும் அவர் தனக்குக் கீழ் பணியாற்ற வேண்டும் என்பதாகும். பிரசார உத்திகளை தானே வகுத்து, தனது தலைமையில் மோடி உள்ளிட்டோர் பணியாற்ற வேண்டும் என்பதே அத்வானியின் கோரிக்கையாகும்.
மேலும் பிரதமர் பதவி கனவுடன் நீண்ட காலமாக இருந்து வந்தவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது கனவை ஆர்.எஸ்.எஸ். தவிடுபொடியாக்கியதை தாங்க முடியாமல்தான் தற்போது பாஜக கட்சிப் பொறுப்புகளை உதறும் முடிவுக்கு அத்வானி வந்துள்ளார். tamil.oneindia.in


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக