புதன், 12 ஜூன், 2013

மேலும் மூன்று MLA க்கள் தேதிமுகவை விட்டு பாயப்போகின்றன

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர், முதல்வரை சந்திக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ள அக்கட்சி தலைமை, அவர்களை தக்க வைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.தே.மு.தி.க.,விற்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உட்பட, 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கட்சி தலைமை மீதுள்ள, அதிருப்தி காரணமாக, ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வாக, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். விஜயகாந்தின் நண்பர்களான, சுந்தர்ராஜன், நடிகர் அருண் பாண்டியன், ரசிகர் மன்றத்தில் இருந்து அரசியலுக்கு வந்த தமிழழகன், சுரேஷ்குமார், மைக்கேல் ராயப்பன், சாந்தி ஆகிய, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்தித்தபின், அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களாக செயல்படுகின்றனர்.தொகுதி பிரச்னை தொடர்பாக, முதல்வரை சந்தித்ததாக கூறினாலும், கட்சி நடவடிக்கைகளில், அவர்கள் பங்கேற்பதில்லை. இதனால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களின் பலம், 23 ஆக மட்டுமே உள்ளது.
வரும், 27ம் தேதி, ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை, எம்.பி.,யாக்க தீவிர முயற்சி நடக்கிறது. >இழுப்பு முயற்சி:v> இதற்காக, தி.மு.க., - மா.கம்யூ., கட்சிகளிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை மேலும் குறைக்க, ஆளும் கட்சி காய் நகர்த்தி வருகிறது. தற்போது, மூன்று பேரை இழுக்க, அ.தி.மு.க., வலை விரித்துள்ளது. இப்பட்டியலில், விஜயகாந்திற்கு நெருங்கிய நபர் ஒருவர் இருப்பதாக தெரிகிறது.அவர், நேற்று பிற்பகலில், முதல்வரை சந்திப்பதாக, தகவல் வெளியானது. அவரோடு, மேலும், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. இத்தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள், தலைமைச் செயலகம் சென்றனர். அங்கு சந்திப்பு ஏதும் நடக்கவில்லை. மூன்று எம்.எல்.ஏ.,க்களின் சந்திப்பு, இன்று நடக்கும் எனத் தகவல் கசியவிடப்பட்டுள்ளது. தேடல்:இதனால், உஷார் அடைந்துள்ள, தே.மு.தி.க., தலைமை, எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நேற்று, முதல்வரை சந்திக்க இருப்பதாக கூறப்பட்ட எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களாக, கட்சி தலைமை அலுவலகம் வருவதை, தவிர்த்து வருகிறார்.தினமும், அவர் கட்சி அலுவலகம் வந்து, விஜயகாந்திடம் பேசிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். முதல்வரை சந்திக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, "அந்த வானத்தை போல, மனம் படைத்த மன்னவனே...' என்ற விஜயகாந்தின் சினிமா பாடல், "காலர் டியூன்' ஆக ஒலித்தது; அவ்வளவு தான். போனை எடுத்து அவர் பேசவேயில்லை.வழக்கமாக, அவரை மொபைல் போன் மூலம், எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அலுவலாக இருந்தால் மட்டும், மொபைல் போனில் குறுஞ்செய்தி மூலம் பதில் அனுப்புவார்.நேற்று, பலமுறை முயற்சித்தும், பத்திரிகையாளர்கள் அழைப்பை மட்டுமின்றி, கட்சி தலைமையின் அழைப்பையும், அவர் ஏற்கவில்லை. அதே நேரத்தில், அவருடன் முதல்வரை சந்திக்க இருப்பதாக கூறப்படும், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல், தே.மு.தி.க., தலைமை திணறி வருகிறது. அனைவரும், கட்சி தலைமை நிர்வாகிகளிடம் சஜகமாக, மொபைல் போனை, "ஆன்' செய்து பேசி வருவதே, இதற்கு காரணம்.

-நமது நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக