செவ்வாய், 11 ஜூன், 2013

நடிக்க ஜியா கானை காதலன் கற்பழித்து சித்தரவைதை செய்தார் ! கடிதத்தில் மேலும் விபரங்கள்

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை அவரது காதலர்
கற்பழித்த விவரம் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்தது. பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 3ம் தேதி மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் சாகும் முன்பு தனது கையால் எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்து அதை போலீசில் ஒப்படைத்தனர். அந்த கடித்தத்தில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் உள்ளன.
காதல் தோல்வி
ஜியா தனது காதலர் சூரஜ் பஞ்சோலி பிற பெண்களுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தார். மேலும் சூரஜ் தன்னை தினமும் சித்ரவதை செய்ததாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். கற்பழித்தாய், துன்புறுத்தினாய் சூரஜ் தன்னை கற்பழித்ததாக கடிதத்தல் ஜியா தெரிவித்துள்ளார். மேலும் சூரஜின் குழந்தையை கருவிலேயே கலைத்ததையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
என் காதலை மதிக்கவில்லை
தனது காதலர் தனது காதலை மதிக்கவில்லை என்றும், வலியை மட்டுமே பெற்றதாகவும் ஜியாவின் கடிதத்தில் உள்ளது.

டார்ச்சர் தாங்க முடியல
அனைத்து வலி, கற்பழிப்பு, டார்ச்சர் அனுபவித்தேன். நீ என்னை மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவாயோ என்று எனக்கு மிகவும் பயமாக உள்ளது என்று ஜியா கடிதத்தில் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக