திங்கள், 10 ஜூன், 2013

நடிகை ஜியா கான்: என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே ! உடைந்த கனவுகளுடனும், பொய்யான வாக்குறுதிகளுடனும் போகிறேன்



 நடிகை ஜியாவின் கடிதத்தில் தனது காதலன் செய்த நம்பிக்கை துரோகத்தை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்:
 
இதை உன்னிடம் எப்படி கூறுவது என்று தெரியவில்லை. ஆனால் என்னிடம் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அனைத்தையும் இழந்துவிட்டேன். இதை நீ படிக்கையில் நான் ஏற்கனவே இந்த உலகை விட்டே போயிருப்பேன். என்னையே உன்னிடம் இழந்தேன். நீ என்னை தினமும் சித்ரவதை செய்தாய். என் கனவுகளை அழித்துவிட்டாய். நான் உன்னை உண்மையாக காதலித்ததற்கு நீ என்னிடம் பொய் கூறினாய். எனக்கு கர்ப்பமாக பயமாக இருந்தது இருப்பினும் என்னையே உன்னிடம் தந்தேன்.
நம் குழந்தையை கருவிலேயே கலைத்தேன். இனியும் வாழ எனக்கு எந்த காரணமும் இல்லை. எனக்கு காதல் தான் தேவையாக இருந்தது. நான் உனக்காக அனைத்தையும் செய்தேன். என் எதிர்காலம் நாசமாகிவிட்டது. என் சந்தோஷம் போய்விட்டது. நீ என் காதலை மதித்ததில்லை. எனக்கு தன்னம்பிக்கை போய்விட்டது.
நீயும் என்னைப் போன்று காதலிப்பாய் என்று எதிர்பார்த்தேன். நான் இந்த இடத்தை விட்டு உடைந்த கனவுகளுடனும், பொய்யான வாக்குறுதிகளுடனும் போகிறேன். தூங்கச் சென்று திரும்பி எழுந்திரிக்கவே கூடாது. அது தான் தற்போது எனக்கு வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.


மும்பை: சூரஜ் பஞ்சோலியின் குழந்தையை கருவிலேயே கலைத்ததாக
தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் தனது கடிதத்தில் எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஜியா கான் இந்தி நட்சத்திரங்களான ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஜரினா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்துள்ளார். காதலில் தோல்வி மற்றும் பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் கடந்த 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அவர் எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் நேற்று முன்தினம் கண்டுபிடித்து அதை போலீசில் ஒப்படைத்தனர்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக