திங்கள், 10 ஜூன், 2013

BJP கோட்டைக்குள் குத்து வெட்டு ! அத்வானி சகல பதவிகளையும் ராஜினாமா செய்தார்

டெல்லி: பாஜக பிரச்சார குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட மறுநாள் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். பாஜக செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்ளவில்லை. தனக்கு வயிறு சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.இது அத்வானிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 85 வயதாகும் அத்வானி கட்சி பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளார். அத்வானியை சமாதானம் செய்ய முயன்ற பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் முயற்சி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜகவின் உட்கட்சி பூசல் பெரிதாகியுள்ளது. அத்வானியின் ராஜினாமாவை ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அத்வானியை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. tamil.oneindia.i

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக