செவ்வாய், 18 ஜூன், 2013

பாலியல் உறவு நடந்தால் அதுவே திருமணம்தான் ! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆண் - பெண் இருபாலருக்குமிடையே நிலவும் பாலியல் உறவே!


சென்னை, ஜூன் 18-  திருமணம் என்பது தாலி கட்டுவதும், மதச் சடங் குகள் செய்வது அல்ல. ஆண் - பெண் இருவருக் கிடையே நிலவும் பாலி யல் உறவே கணவர் மனைவி என்பதை நிச்ச யிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் புதிய சிந்தனையின் அடிப் படையில் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 35). இவருடைய கணவர் முகமது. (இரண்டு பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). முகமது செருப்பு தயா ரித்து விற்பனை செய் பவர். இவர்களுக்கு 16.9.94 அன்று இஸ்லா மிய முறைப்படி திரு மணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையின் பலனாக 23.12.96 மற்றும் 1.1.99 அன்றும் முறையே இரண்டு பெண் குழந் தைகள் பிறந்தன.
1999-ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு முகமது பிரிந்து சென்றுவிட்டார். மீண் டும் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. முகமது வுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வரு கிறது. எனவே அவரிடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் பாத்திமா வழக்கு தாக் கல் செய்தார்.

இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் விசாரித்தது. விசார ணையின்போது, புகைப் படங்கள், முகமதுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தை களின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை பாத்திமா தரப்பு ஆதா ரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. செருப்பு குடோனில் வேலை பார்த்தபோது தன்னுடன் பழகி, அதன் பிறகு தன்னை முகமது திருமணம் செய்ததாக பாத்திமா தரப்பில் வாதி டப்பட்டது.
கையொப்பமே ஆதாரம்
இரண்டாவது குழந் தைக்கான பிறப்பு அறிக் கையில், தந்தை முகமது என்றும், தாய் பாத்திமா என்றும் குறிப்பிடப்பட் டுள்ளதை டாக்டர் சாட் சியாகக் கூறினார்.
இரு தரப்பு வாதங் களையும், ஆதாரங் களையும் பரிசீலித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி, இரண்டு குழந் தைகளும் முகமதுக்குத் தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006-ஆம் ஆண்டு உத்தர விட்டார்.
ஆனாலும், முகம துவை திருமணம் செய் ததற்கான ஆதாரம் எது வும் இல்லை என்பதால் பாத்திமாவுக்கு பரா மரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்த ரவை எதிர்த்து நீதிமன் றத்தில் பாத்திமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.
நீதியரசர் கர்ணன்
இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித் தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுத யத்தில் பாதிப்பு ஏற் படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.
இந்த இரண்டு குழந் தைகளையும், முகம துக்கு முறைதவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின் போது, கணவன், மனை வியிடம் மருத்துவமனை  நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவ துண்டு. அந்த ஆவணத் தில் கணவன், மனை விக்காக குறிக்கப் பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையொப்பமிட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.
திருமணத்தை நடத்துவது, சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல.
இந்த வழக்கில் முகமது மற்றும் பாத்திமாவை, வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்தக் நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான்.
பாலியல் உறவு முக்கியம்
ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும் என்பது இந்த  நீதிமன்றத்தின் கருத்து.
ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக் காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். எனவே அப்படிப்பட்ட பாலியல் தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்ட பூர்வமாக மனைவியிடம் இருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான், மற்றொரு வரை கணவன் திருமணம் செய்ய முடியும்.
ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்ப தால், அவரிடம் இருந்து சட்ட பூர்வமான விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாது.
சட்ட பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே, பின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகி விடு கின்றனர்.
அப்படி சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கெனவே திருமணம் ஆகாத வர்கள்), பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றும் கருதலாம். சட்ட பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப் படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.
தாலி கட்டுவதும் சடங்குகளும் மட்டும் திருமணமல்ல
தாலி கட்டுவது, மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமு தாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின் பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதி யான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.
எனவே ஒரு திருமணத்தின் முக்கிய மான சட்ட பூர்வமான ஆதாரம் என்னவென்றால், அது அந்த இணை யர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். இந்த வழக்கில் அப்படிப் பட்ட உறவு நடந்தேறியுள்ளது. எனவே தங்களுக்கு இடையே பாலி யல் உறவு இருந்ததற்கான ஆதாரங் களை குடும்பநல நீதிமன்றத்தில்  தாக்கல் செய்து, திருமணம் நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம்.
அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில், தன்னை முகமதுவின் மனைவி என்று அரசு ஆவணங்களில் பாத்திமா பதிவு செய்து கொள்ளலாம். சடங்குகளு டன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக் கொள்ளலாம்.
திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால் தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். பாத்திமா விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான்.
பராமரிப்புக்காக பணம் வழங்கப்பட வேண்டும்
ஆகவே, கணவன் முகமது தனது மனைவி பாத்திமாவுக்கு மாதம் ரூ.500-அய் பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000-ஆம் ஆண்டு செப்டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக