செவ்வாய், 18 ஜூன், 2013

ஜிகர்தண்டா ஷூட்டிங் இன்று மதுரையில் துவங்குகிறது”



அமைதியாக வெளிவந்து ஆர்ப்பரிக்கும் வெற்றி பெற்ற பீட்சா திரைப்படத்தின் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தனது அடுத்த புராஜக்டை துவங்கிவிட்டார். ஜிகர்தண்டா என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று துவங்கியுள்ளது.ஜிகர்தண்டா திரைப்படத்தில் தற்சமயம் தமிழ்த் திரையுலகில் அதிக கவனம் செலுத்திவரும் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடிக்க, தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்துவரும் நடிகை லக்‌ஷ்மி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜிகர்தண்டா குறித்து சுப்புராஜ் டுவிட்டரில் “என் இரண்டாவது படமான ஜிகர்தண்டா ஷூட்டிங் இன்று மதுரையில் துவங்குகிறது”என்று கூறியுள்ளார்.மேலும் ஜிகர்தண்டா திரைப்படத்தின் ஹீரோ சித்தார்த் “ஹீரோவாக தமிழில் என் 20-வது;திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா. ஷூட்டிங் இன்று மதுரையில் துவங்குகிறது” என்று கூறியுள்ளார்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக