வியாழன், 6 ஜூன், 2013

மாணவர்களிடையே புரிந்துணர்வுக்கு குழிபறிக்கும் தமிழக அரசு

பிரித்தாளும் பாலியல் nisaptham.com
தமிழ்நாட்டில் இனிமேல் பெண்கள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்கள்தான்
அதேபோல வகுப்புகளில் பேராசிரியர்கள் கேட்கும் கேள்விக்கு பதில்
தெரியவில்லை என்றாலோ அல்லது அசைன்மெண்ட் செய்யாமல் வந்துவிட்டாலோ மற்ற எந்த அவமானத்தையும் விடவும் பத்து பெண்களுக்கு முன்னால் அவமானப்படுகிறோமே என்பதுதான் பெரிய வருத்தமாக இருக்கும். இந்த ‘எதிர்பாலின’ தயக்கம் என்பது அவ்வளவு சீக்கிரம் போய்விடுவதுமில்லை. வேலைக்கு போகும் வரைக்குமோ அல்லது ஆயுட்காலம் முழுவதற்குமோ சிரமப்படும் நபர்களும் இருக்கிறார்கள். பெண்கள் பள்ளியில் படித்த பெண்களுக்கும் இதே சிக்கல்கள் இருக்கும் என நினைக்கிறேன்.
டீச்சராக இருக்கப் போகிறார்களாம். நம்மவர்கள் செமத்தியாக யோசிக்கிறார்கள்.
அப்படியே ஆண்களுக்கான பள்ளியில் ஆண்கள் மட்டும்தான் வாத்தியாராக இருக்க முடியும் என்றும் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. இனி பட்டாசுதான். ஏற்கனவே ஆண்களுக்கு தனியான பள்ளி, பெண்களுக்கு தனியான பள்ளி என காயடிக்கிறார்கள்- இதை காய வைக்கிறார்கள் என்றுதானே அர்த்தப்படுத்திக் கொண்டீர்கள். That's good. இனி ‘தார் பாலைவனத்தையே’ பள்ளிகளுக்குள் கொண்டு வந்து சேர்த்த பெருமையும் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கட்டும்.ஆண்கள் பள்ளியில் படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் பாவம். அதுவரைக்கும் காய்ந்து கிடந்திருப்பார்கள் என்பதற்காகச் சொல்லவில்லை. முதன் முறையாக கல்லூரிக்கு போனவுடன் பெண்களுடன் பேசுவதற்கு அத்தனை சிரமப்பட வேண்டியிருக்கும். பெண்களுடன் பேச வேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனால் என்ன பேசுவது? எப்படி பேசுவது? என்பதே பெருங்குழப்பமாக இருக்கும். யாராவது ஒரு பெண் யதேச்சையாக பேசிவிட்டாலோ அல்லது நம்மை தடம் வழியில் பார்த்து சிரித்துவிட்டாலோ அவ்வளவுதான். மனசு குதிக்கும் குதி இருக்கிறதே!அடுத்து வரும் நாட்களில் சோறு தண்ணி இறங்காது. சோறு தண்ணிதான் இறங்காதே தவிர அவளிடம் மீண்டும் பேசுவதற்கு தைரியமெல்லாம் வந்துவிடாது.
எங்கள் பள்ளி ஆண்களுக்கான பள்ளி. ஆரம்பகாலத்தில் எப்படியிருந்தது என்று தெரியவில்லை. அப்பா காலத்தில் பெண்களுக்கான பள்ளியொன்றை தனியாகக் கட்டியிருக்கிறார்கள். கட்டினதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு பையனும் பெண்கள் பள்ளியின் பக்கமாக போகக் கூடாது என்று ரூல்ஸ் போட்டுவிட்டார்களாம். அப்படி யாராவது அந்த வழியாக போனார்கள் என்று தெரிந்தால் கதை காலிதான். அடுத்த நாள் ப்ரேயரில் அருணாச்சலக் கவுண்டர் என்ற அந்தக் காலத்து ஹெட்மாஸ்டர் “நேத்து சில பொறுக்குமணிகள் பழனியம்மாள் ஸ்கூல் வழியாக போயிருக்காங்க. போனவங்க கொஞ்சம் ஸ்டேஜ்க்கு வர்றீங்களா? இல்லை நானே பேரை வாசிக்கட்டுமா?” என்பாராம். பார்த்திபன் ஸ்டைலில் போட்டு வாங்கினாரா என்று தெரியவில்லை. பம்மிக் கொண்டே மேடைக்கு வருபவர்களை எல்லாம் வைத்து கொஞ்சம் நேரம் ட்ரம்ஸ் வாசித்துவிட்டு கீழே அனுப்புவாராம். “நீங்க மாட்டியிருக்கீங்களாப்பா?” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு நாள் கேட்டுவிட வேண்டும். 
பாவிகள்! இப்படியெல்லாம் பிரித்து வைத்து என்ன சாதித்தார்கள் என்று தெரியவில்லை. அதே பள்ளியில் எட்டாவது படித்தவர்தானே முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - அவர் படித்ததே அவ்வளவுதான் என்பது வேறு விஷயம். ஆனால் நல்ல மனுஷன். தனது பள்ளியிலிருந்து பெற்றுக் கொண்ட ‘ஜீன்’ காரணமாகவோ என்னவோ கடந்த முறை அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது செய்த ஒரு அறிவிப்பு செய்தது இப்போது ஞாபகம் வருகிறது. “மாநகர பேருந்துகளில் ஆண்கள் பகுதிக்கும் பெண்கள் பகுதிக்கும் இடையில் கம்பிவேலி அமைக்கப்படும்”- அந்த அறிவிப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுது வந்திருக்கும் ஆம்பளை வாத்தியார், பொம்பளை டீச்சர் அறிவிப்பை அமுல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.
இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைப்பதனால் மட்டும் பாலியல் பிரச்சினைகளைத் தடுத்துவிட முடியுமா? மேற்கத்திய நாடுகளில் இங்கு இருப்பதை விடவும் பாலியல் குற்றங்கள் குறைவுதான். அங்கு காதலுக்கு சம்மதம் சொல்லாவிட்டால் முகத்தில் ஆசிட் அடிப்பது, நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வது போன்றவையெல்லாம் அரிதிலும் அரிதான காரியங்கள். அங்கு ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன? சட்டங்களாலும், ஆண் பெண்களை பிரித்து வைப்பதாலும் ஒரு போதும் பாலியல் குற்றங்களை தடுத்துவிடலாம் என எப்படி அரசு நம்புகிறது? பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பது என்பது சமூக, பண்பாட்டு மாறுதல்களாலும், Indirect impactகளைத் தடுப்பதாலும் மட்டுமே சாத்தியம். 
அதென்ன Indirect impact? நம்முடைய ரூல்ஸ்களால் உருவாகும் விளைவுகள்தான். ஆணும் பெண்ணும் பேசுவது குற்றம், அவர்கள் காதலிப்பது குற்றம், காமம் பற்றி வெளிப்படையாக விவாதிப்பது அநாகரீகம் என ஏகப்பட்ட வரைமுறைகளை உருவாக்கிவிடுகிறார்கள். ஆனால் நம் கண்களில் படுவதையெல்லாம் காமத்தை தூண்டும் சமாச்சாரங்களாக இருக்க அனுமதித்துவிடுகிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பசியில் கிடப்பவன் முன்னால் பதார்த்தங்களை வைத்துவிட்டு எதையும் தின்னக் கூடாது என்று சொல்வது போல. இந்த முரண்பாடுகளால் உருவாகும் சிக்கல்களைத்தான் Indirect Impacts என்கிறேன். டிவி, சினிமா,பத்திரிக்கைகள் என கண்ணில்படும் சகலத்திலும் காமத்தை தூண்டும் மசாலாவை தூவி வைத்திருக்கிறார்கள். பெர்ஃப்யூமிலிருந்து, உள்ளாடை வரைக்கும் எந்த விளம்பரமும் கிட்டத்தட்ட ‘காண்டம்’களுக்கான விளம்பரங்களைப் போலத்தான் இருக்கின்றன. ஏதாவது போஸ்டரையோ, படத்தையோ பார்த்து ‘ங்கொக்கமக்க்க்க்க்க்க்க்கா’ என்று டெம்ப்ட் ஆகாமல் ஒரு நாள் கூட அலுவலகம் போக முடிவதில்லை. பிறகு எப்படி பாலியல் பிரச்சினைகளைத் தடுப்பார்கள்?
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சகஜமான பழக்கவழக்க முறையை உருவாக்கும் செயல்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும். முடியுமானால் ஆண்களுக்கான பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகள் என்ற பாகுபாடுகளைக் கூட களைத்துவிடலாம். ஆண்களும் பெண்களும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்குவதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர ‘ஆண்கள் என்பவர்கள் ஜந்துக்கள்’ என்ற நினைப்பை பெண்களுக்கும், ‘பெண்கள் என்பவர்கள் கிடைக்காத சரக்கு’ என்ற நினைப்பை ஆண்களுக்கும் உருவாக்கும் Explicit Psychological difference ஐ மனதுக்குள் விதைப்பதாக அரசின் செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. 
சரி, நாம் சொல்வதையெல்லாம் அரசாங்கம் கேட்கவா போகிறது? அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் விடுங்கள். ஒரு ஜாலி மேட்டரைச் சொல்லி திரை போட்டுவிடலாம். 
ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது அறிவியலில் ‘இனப்பெருக்கம்’ என்ற ஒரு பாடம் இருந்தது. அந்த வருடம் பார்த்து எங்களுக்கு ஒரு லேடி டீச்சர்தான் அறிவியல் பாடத்தை எடுத்தார்கள். மற்ற பாடங்களை எல்லாம் முடிப்பதற்கு முன்பாகவே நாங்களாகவே அந்தப் பாடத்தை படித்துவிட்டோம். நான் சற்று ஆர்வக் கோளாறு என்பதால் அந்தப் பாடத்தை மட்டும் கணக்கு வழக்கில்லாமல் திரும்பத் திரும்ப நான் படித்திருந்தேன். இந்த டீச்சர் எப்படி அந்தப் பாடத்தை எடுப்பார்கள் என்று பயங்கர curious ஆக இருந்தோம். எப்படியும் படம் போட்டு பாகம் குறிப்பார்கள் என்று கிளுகிளுத்துக் கொண்டோம். அந்த நாளும் வந்தது. அதுவரைக்குமான அறிவியல் பாடங்கள் முடிந்துவிட்டது. இனி ‘இனப்பெருக்கம்’தான் நடத்த வேண்டிய பாடம். மாலை நேரத்து கடைசி பிரிவேளைதான் அறிவியல். நாங்கள் நகங்களைக் கடித்துக் கொண்டு கமுக்கமாக சிரித்துக் கொண்டிருந்த போது வழக்கத்திற்கு மாறாக சண்முகம் வாத்தியார் வந்தார். வந்தவர் கண்ணும் கருத்துமாக ‘இனப்பெருக்கம்’ பாடத்தை முடித்துவிட்டு போய்விட்டார். அடுத்த நாள் வந்த டீச்சர் வழக்கம் போல அடுத்த பாடத்திலிருந்து ஆரம்பித்தார். அவ்வளவுதான் டீச்சரின் டக்கு. ஒருவருடமாக ஊதி வைத்திருந்த பலூன் பெருத்த சப்தத்துடன் சுருங்கிப் போனது.
இன்னொரு டீச்சர் இஸ்லாமிய மதத்தின் இருபெரும் பிரிவுகள் பற்றி பாடம் நடத்தும் போது அந்த வரியை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு அடுத்த வரிக்கு போனதும் நினைவில் இருக்கிறது. இனிமேல் அந்தப் பிரச்சினையெல்லாம் டீச்சர்களுக்கு வராது. ம்ம்ம்ம்ம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக