சனி, 15 ஜூன், 2013

கனிமொழி ராஜ்யசபா வேட்புமனு தாக்கல் செய்தார் ! காங்கிரஸ் மாக்சிஸ்ட் ஆதரவு?

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக ஏற்கெனவே 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் 23 எம்.எல்.ஏக்களைக் கொண்ட திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி மீண்டும் போட்டியிட இருக்கிறார். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் திமுக, 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரசின் ஆதரவை கோரியிருக்கலாம். இரு கட்சிகளும் ஆதரவு அளிக்க உறுதி அளித்திருப்பதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்று கனிமொழி வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்காக இன்று காலை கோபாலபுரம் சென்ற கனிமொழி, தமது தந்தையிடம் வாழ்த்துப் பெற்றார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக