புதன், 26 ஜூன், 2013

பாவனா அப்செட் ! சித்திரம் பேசுதடி‘, ‘தீபாவளி’, ‘ஜெயம் கொண்டான்‘ போன்ற படங்களில் நடித்தவர்

சென்னை:கோலிவுட்டில் வாய்ப்பில்லாமல் கன்னட படங்களில் நடிக்க சென்ற
பாவனா பட தோல்வியால் அப்செட் ஆனார்.
‘சித்திரம் பேசுதடி‘, ‘தீபாவளி’, ‘ஜெயம் கொண்டான்‘ போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. தமிழில் அவரது மார்க்கெட் சூடு பிடிக்காததால் மலையாள படங்களில் நடிக்கச் சென்றார். அங்கும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் கன்னட படங்களில் வந்த வாய்ப்பை ஏற்றார். புனித் ராஜ்குமார், உபேந்திரா, கணேஷ், சுதீப் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தார். சமீபத்தில் சுதீப் நடித்த ‘டொப்பிவாலா படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக பாவனா நடித்தார். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறாததால் அப்செட் ஆனார். இதையடுத்து கன்னட படங்களில் அவருக்கு வாய்ப்பு இல்லாததால் மேலும் அப்செட்டில் இருக்கிறார். ‘இப்போதைக்கு கன்னட படங்களை ஏற்கவில்லை. மலையாளத்தில் ‘ஹனி பீ படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். எம்.டி. வாசுவதேவன், ஹரிஹரன் இணைந்து உருவாக்கும் ‘எழமத அறிவு பட ஷூட்டிங்கிற்காக விரைவில் சென்னை செல்கிறேன். மேலும் 3 மலையாள படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது என்றார் பாவனா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக