புதன், 26 ஜூன், 2013

Benazir Bhutto கொலை வழக்கில் பர்வேஸ் முஷாரப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


The report contains “overwhelming circumstantial evidence” that Musharraf would be the main beneficiary from the removal of Bhutto and her party’s failure during the elections without her leadership.
It says that Musharraf’s government had ordered VVIP security to two former prime ministers – Shaukat Aziz and Chaudhry Shujaat Hussain – but had deliberately denied the same to Bhutto despite repeated requests.

 இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் வசித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்(69) தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த மார்ச் மாதம் மீண்டும் நாடு திரும்பினார். >ஆனால், அதிபராக இருந்த போது 2007ம் ஆண்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது, நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்ததால் அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், அவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரது பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கில் முஷாரப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முஷாரப் மீது 4 முக்கிய குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.

அதில் அமெரிக்க பத்திரிகையாளர் மார்க் சீகல் உள்ளிட்ட 4 பேரின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. மார்க் சீகல் கூறியதன் அடிப்படையில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ''பெனாசிர் புட்டோவுடன் நான் அமர்ந்து இருந்தபோது முஷாரப் அவரை அழைத்து மிரட்டினார்'' என்று சீகல் கூறியதாக எப்ஐஏ தெரிவித்துள்ளது.

முஷாரப்பின் மீதான வழக்கு விசாரணை ஜூலை 2ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அப்போது அவருக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று தீவிரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி சௌத்ரி ஹபீப்,உர்,ரஹ்மான் உத்தரவிட்டார். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதால் முஷாரப் மீது தேச துரோக வழக்கு தொடரப்படும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்த மறுநாளே முஷாரப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக