வெள்ளி, 28 ஜூன், 2013

ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிப்பதை விட ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிப்பதே தேவலை! பரிதியின் better choice

பரிதி இளம்வழுதி
திமுகவை விட்டு பிரிந்து சென்றது உண்மையில் பெரிய
 இழப்பு தான் . எப்படித்தான் வெற்று வார்த்தைகளை  அள்ளி வீசி சமாளித்தாலும் இது பெரிய  இழப்புத்தான் .
பரிதி என்ன சாதாரணமான அரசியல்வாதியா ? தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த ஒரு சுயமரியாதையுள்ள பகுத்தறிவுவாதி, அயராத கழக தொண்டன் நல்ல பேச்சாளர் என்பதை எல்லாம் விட சரித்திரம் அவருக்கு பெரிய ஒரு இடத்தை கொடுத்திருக்கிறது ,
எமெர்ஜென்சி காலத்தில்  தனி திமுக சட்ட மன்ற உறுப்பினராக இருந்து ஆளுங்கட்சியை தூங்க விடாமல் செய்த கம்பீரமான வரலாறு பரிதிக்கு இருக்கிறது ,
ஸ்டாலினுக்கு ஜால்ரா வீச முடியாத நல்ல  பல தலைவர்கள் எல்லாம் திமுகவை விட்டு  விலகி கொண்டே வருகிறார்கள்
கடந்த காலத்தில் கழகம் கண்ட பல தோல்விகளுக்கு இதுதான் பெரிய காரணம்
கலைஞரின் மீது கொண்ட பற்றின் காரணமாக பலர்  மௌனமாக உள்ளார்கள் .அவர்களின் மனக்குமுறல்களை  லேசாக எடுத்துகொள்வது சரியல்ல ,
கழகத்தின் உண்மை தொண்டனுக்கு ஸ்டாலின் ஒரு மேட்டு குடி அரசியல்வாதி ஆகத்தான் தெரிகிறார் , திராவிட பாரம்பரிய கொள்கைகளை அவர் எவ்வளவு தூரம் நேசிக்கிறார் என்பது இப்போது சந்தேகத்திற்கு இடமாகி உள்ளது , ஸ்டாலினால் ஒதுக்கப்படும் திமுக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் லிஸ்ட் பெரிய ஒரு செய்தியை சொல்கிறது ,

இந்த வெளியேற்றம் இன்னும் தொடரக்கூடிய மாதிரிதான் தெரிகிறது  ஸ்டாலின் நடவடிக்கைகள் தனிமனித வழிபாடை நோக்கி செல்கிறது திமுக ஜெயலலிதாவின் கட்சி போன்று ஒரு அடிமை கூடாரம் அல்ல ,
திமுக ஒரு ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகம் என்று யாரும் நினைத்தால் அதைவிட அதிமுக பெட்டர் , ஆட்சியிலும் உள்ளார்கள் .
மிகவும் நல்ல எண்ணத்தில் சொல்லப்படும் கருத்துக்கள் சுயநலவாதிகளின் காதுகளுக்குள் ஒரு போதும் எட்டாது ,
தற்போது கழகத்தின் உண்மை தொண்டனின் பயம் எல்லாம் அடுத்தது யார் கழகத்தை விட்டு போக போகிறார்கள் என்பதே! அது குஷ்பூவாக இருக்க கூடாது என்று விரும்புகிறோம் .
 குஷ்பூவின் விவகாரத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் , உண்மையில் குஷ்பூ மிகவும் சரியான விதத்தில் தான் விகடனுக்கு பேட்டி அளித்தார் , அதிலும் அவர் கூறிய கருத்து மிக சரியான ஜனநாயக கருத்தாகும் ,
குஷ்பூவின் செல்வாக்கை under estimate செய்தால் பின்னாளில்  Regret பண்ணவேண்டி வரும் ,
இன்று பரிதி சென்றதை  லேசாக எடுத்துகொண்டால் அதற்கும் விலை கொடுக்க வேண்டி வரும் ,
ஸ்டாலின் அணியில் இருந்தால் தான் திமுகவில் இருக்கலாம் என்றால் அம்மாவின் கட்சியே மேல் என்று திமுகவின்  பழைய தொண்டன் கூட நினைக்க கூடும் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக