வெள்ளி, 28 ஜூன், 2013

அமெரிக்காவில் சட்டவிரோதமாக 1 கோடி வெளிநாட்டினர் ! அனேகமாக விசா கொடுக்கப்படும்

அமெரிக்க அதிபராக ஒபாமா 2-வது தடவை பொறுப்பேற்றதும் சட்ட
விரோதமாக குடியிருக்கும் வெளிநாட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக பாராளுமன்றத்தில் குடியுரிமை மறு சீரமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர், இச்சட்டம் ஒப்புதலுக்காக ‘செனட்’ உறுப்பினர்கள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. அதில், கூடுதல் வாக்குகள் பெற்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, அமெரிக்காவில் 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக எந்த வித ஆவணமும் இன்றி குடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்ட விரோதமாக வெளிநாட்டினர் நுழைவதை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக கூடுதலாக 20 ஆயிரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், எல்லையில், புதிய சுவர்கள் கட்டவும், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டம் நிறைவேற ஓட்டு போட்ட செனட் உறுப்பினர்களுக்கு அதிபர் ஒபாமா பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக