சனி, 1 ஜூன், 2013

சீனிவாசன் BCCI பதவி விலக கடும் நிபந்தனைகள் விதிக்கிறார் ! யாருக்குதான் மனம் வரும் ?

சென்னை/மும்பை: பிக்ஸிங் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வரியத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமெனில் 4 நிபந்தனைகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று என். சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். பிக்ஸிங் விவகாரத்தில் தமது மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் என்.சீனிவாசன், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிசிசிஐ செயற்குழு நாளை காலை சென்னையில் கூடுகிறது. முன்னதாக தாம் பதவி விலக வேண்டுமெனில் சீனிவாசன் முன்வைத்திருக்கும் 4 நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. 1) இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தாம் பிரதிநிதியாக இருக்க வேண்டும் 2) தனது செயலர், பொருளாளரை தாமே தேர்வு செய்ய வேண்டும் 3) பிசிசிஐ தலைவர் என்பவர் அமைப்பை சாராதவராக இருக்கக் கூடாது 4) தமக்கு எதிராக ராஜினாமா செய்த ஷிர்கே மற்றும் ஜத்காலே ராஜினாமாவை திரும்பப் பெறவே கூடாது என்பதுதான் சீனிவாசன் விதித்த நிபந்தனைகளாகும். நாளைய சென்னை கூட்டத்தில் இந்த நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் சீனிவாசனின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளபட்டால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக