வெள்ளி, 14 ஜூன், 2013

பா.ம.க கலவரத்தால் 50 கோடி இழப்பு ! கூடவே தருமபுரி அதிமுக கலவர இழப்புக்களும் கணக்கெடுக்க முயற்சி ?

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைதைத் தொடர்ந்து, வட பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், இழப்புத் தொகையை சம்பந்தப் பட்டவர்களிடம் இருந்தே வசூலிக்க வகை செய்யும், "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992' என்ற சட்டத்தை, கடந்த முறை, ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ், பா.ம.க.,விடம், தற்போது இழப்பீட்டுத் தொகை வசூலிக்கும் முயற்சிகள் நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
மாவட்டங்களில், நடந்த வன்முறை சம்பவங்களால், 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இத்தொகையை, அக்கட்சியிடம் அபராதமாக வசூலிக்கும் வகையில், அரசு, அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளும் என, கூறப்படுகிறது. அப்படியே தருமபுரி அதிமுக  பஸ் எரிப்புக்கும் ஒரு மதிப்பு போட்டு காசு வாங்கினா நல்லா கல்லா கட்டலாம்...மக்களுக்காவது பணம் போய் சேரும். கலவரமும் குறையும்.
மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி, வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. இதில் பங்கேற்க, கிழக்கு கடற்கரை சாலை வழியாக, மாமல்லபுரத்திற்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்தோருக்கும், மரக்காணத்தில் ஒரு பிரிவினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கலவர சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து, விழுப்புரத்தில், தடையை மீறி போராட்டம் நடத்திய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கண்டித்து, வட மாவட்டங்களில், வன்முறை சம்பவங்கள் நடந்தன. விழுப்புரம் மாவட்டத்தில், தரைப்பாலம் ஒன்றையும், குண்டு வைத்து தகர்த்தனர். 600க்கும் மேற்பட்ட பஸ், வாகனங்கள் நொறுக்கப்பட்டன. அரசு பஸ், தனியார் பஸ், லாரிகள் என, 15க்கும் மேலான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன; இதில், இருவர் இறந்தனர்.

இதன்படி, வடமாவட்டங்களில் எவ்வளவு சொத்துக்கள் சேதமாகியுள்ளது என, கணக்கெடுக்கும் பணி, மாவட்ட வருவாய் துறைய மூலமாக நடந்து முடிந்து, இதுகுறித்த அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அரசு தரப்பில் விசாரித்தபோது, "வன்முறையால் ஏற்பட்ட சேதம் குறித்து நடந்த ஆய்வில், 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது' என்றனர். இழப்பீட்டுத் தொகையை, அந்தக் கட்சியிடம் அபராதமாக பெறும் வகையில், அரசு, அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளும் என, கூறப்படுகிறது. ஏற்கனவே, கலவரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, பா.ம.க.,வைச் சேர்ந்த, 96 பேர் குண்டர் சட்டத்திலும், 24 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தம் இல்லை: வேலூர் சிறையில் உள்ளோரை பார்த்துவிட்டு வெளியே வந்த அன்புமணி, "பா.ம.க.,வுக்கு அபராதம் விதிப்பு என்பது வேடிக்கையாக உள்ளது. தர்மபுரியில், பஸ் எரிப்பு, பஸ் உடைப்பு சம்பவங்கள் நடந்தன. அப்போது, அ.தி.மு.க.,வினர் காசு கொடுத்தனரா; எல்லா கட்சிகளும் தான் இது போன்று ஈடுபடுகின்றன. தற்போதை வன்முறைக்கும், பா.ம.க.,வுக்கும் சம்பந்தம் இல்லை' என்றார் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக