செவ்வாய், 21 மே, 2013

வடிவேலுவின் அட்டகாசமான Second Round இன்று ஆரம்பம்

வடிவேலுவின் மறு பிரவேசம் அவரது ரசிகர்களால் ஆவலுடன்
எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தெனாலி ராமன் படத்திற்காக பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் அமைந்த பாடல் காட்சி ஒன்றில் வடிவேலு நடிக்க ஷூட்டிங் துவங்கியது.தெனாலிராமன் படத்தை இயக்குபவர் போட்டாப்போட்டி இயக்குனர் யுவ்ராஜ், படத்தின் இசையை டி.இமாம் கவனித்துக் கொள்கிறார்.இதற்காக பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் வரும் ஸ்டைலில் ஒரு பாட்டை இசையமைத்திருக்கிறார் இமாம். ரிக்கார்டிங் தியேட்டரில் வடிவேலு இருந்தார். இப்போது இந்தப் பாடல் காட்சியுடந்தான் தெனாலி ராமன் ஷூட்டிங்கே துவங்கியது.>வடிவேலுவை சந்தித்தது ஒரு இனிய அனுபவம் 1960களில் வருவது போன்ற ஒரு பாடலை நான் அவருக்கு வழங்கியுள்ளேன். வடிவேலுவே மிக மகிழ்ச்சியடைந்து அந்த காலத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். பாட்டை எனக்கு கொடுத்திருக்கீங்க என்று நன்றி கூறியதாக தெரிவிக்கிறார் டி.இமா‌ன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக