சனி, 11 மே, 2013

மகனை மீட்டுதருமறு ISI இடம் கெஞ்சும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜிலானி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ,கடத்திச் செல்லப்பட்ட தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ஐ.எஸ்.ஐ.யின் உதவியை நாடியுள்ளார் முன்னாள்
பிரதமர் யுசுப்ராஸா கிலானி. />பாகிஸ்தானில் இன்று பலத்த பாதுகாப்புடன் பார்லிமென்ட் தேர்தல் நடக்கிறது. 342 தொகுதிகளுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளது. 8.6 கோடி மக்கள் ஓட்டளிக்க உள்ளனர். பார்லிமென்ட் தேர்தலுடன், நான்கு மாகாண தேர்தல்களும் நடைபெறுகின்றன.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின், தேரிக்-இ-இன்சாப் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.இந்நிலையில் கடந்த 5-ம் தேதி (சனிக்கிழமை) , பாகிஸ்தானில் முல்தான் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமர் யுசுப்ராஸா கிலானியின் 27 வயது மகன் அலி ஹைதர் (27), 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் துப்பாக்கி முனையில் கடத்திச்செல்லப்பட்டார். இதுவரை அவர் குறித்த தகவல் இல்லை.


ஐ.எஸ்.ஐ. உதவி தேவை

இது தொடர்பாக கிலானி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பஞ்சாப் மாகணத்தைச் சேர்ந்த ‌‌தலிபான் ஆதரவாளர்கள் தான் கடத்திச்சென்றுள்ளனர். எனது மகன் குறித்த எந்த தகவலும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. , உளவு அமைப்பான ஐ..எஸ்.ஐ. தலையிட்டு அவன் இருக்குமிடத்தை கண்டுபிடித்து மீட்க வேண்டும். போலீசாரும் ஐ.எஸ்.ஐ.க்கு உதவிட வேண்டும் என்றார்.
போலீசார் தெரிவி்க்கையில், அலி ஹைதருக்கு , தடை செய்யப்பட்ட லெஷ்கர்-இ-ஜஹாங்வி, ஷிபா-இ-ஷபாபா என்ற பயங்கரவாத அமைப்புகள் ஏற்கனவே மிரட்டல் விடுத்தன. அவர்கள் தான் கடத்திச்சென்றிருக்க கூடும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக