சனி, 11 மே, 2013

கல்வீசுக்களில் இருந்து தப்ப இனி ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணியவேண்டும்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஅரியலூர்: பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடையடைப்பு, சாலைமறியல், வாகனங்களுக்கு தீ வைப்பு, வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால் அரியலூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. மாலை 6 மணிக்கு மேல் கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
பெரும்பாலும் கல் வீச்சில் பஸ்களின் முன் பக்க கண்ணாடிகளையே அதிகம் உடைக்கின்றனர். வாழப்பாடி அருகே நேற்றிரவு முன்பக்க கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல் வீசியதில், பயணி ஒருவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இந்நிலையில், கல்வீச்சில் டிரைவர்களுக்கு காயம் ஏற்படாமல் தடுக்க, போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் டிரைவர்களுக்கு ஹெல்மட் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக நீண்ட தூர பஸ் டிரைவர்களுக்கு தற்போது ஹெல்மட் வழங்கப்படுகிறது. அவற்றை டிரைவர்கள் அணிந்து கொண்டு பஸ்களை ஓட்டி வருகின்றனர் tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக