வெள்ளி, 24 மே, 2013

IPL Chnnai சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி :

சிபிசிஐடி அலுவலகத்தில் டி.எஸ்.பி. வெங்கட்ராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஐபிஎல் சூதாட்டம் தரகர்கள் குறித்து பேசினார்.அவர்,  ‘’இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான மற்றும் கற்பனையான அடையாள ஆதாரங்களை கொடுத்து செல்போன் சிம்கார்டுகளைபெற்று அதன் மூலம் தங்களூடைய குற்ற சதி மற்றும் மோசடியை புரிந்துள்ளது புலனாகிறது.எனவே, இந்திய தண்டனை சட்டம் 419 ( ஆள்மாறாட்டம் ), 465 ( மோசடி), 468 (ஆள்மாறாற்றம் செய்து மோசடி), 471 ( போலியான ஆதாரங்களை உண்மையானது போல் உபயோகித்தல்), ஆகிய பிரிவுகள் ஏற்கனவே உள்ள சட்டப்பிரிவுகளூடன் இந்த வழக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.இதுவரைஇந்த வழக்கு சம்பந்தமாக 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 10க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.  இதில், 18 லட்சம் பணம், 50 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் வெற்று காசோலைகள்,மடிக்கணினிகள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட் டுள்ளன.  இது தவிர, பல வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும், வங்கிக்கணக்கள் முடக்கப்பட்டுள்ளன.  இவர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்ட செல்போன் எண்களின் அழைப்பு விபரங்கள், கணினிகளில் எடுக்கப்பட்ட தகவல்கள் ஆய்வு செய்யப் பட்டு வருகிறது.புக்கிகளுக்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளதும், ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் பல புக்கிகளூடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பு உள்ளதும் புலனாகிறது.  அனைத்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.  முக்கிய புக்கியான கிட்டி என்கிற உத்தம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார் நக்கீரன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக