வெள்ளி, 24 மே, 2013

போலீஸ்:20,000 ரூபா கொடுக்காவிட்டால் குண்டர் சட்டத்தில் போடுவோம்? அன்புமணி குற்றச்சாட்டு !

போராட்டம் காரணமாக பா.ம.க.வினரை கைது செய்யும் போலீசார், சந்தடி
சாக்கில் சந்திலே சிந்து பாடுகின்றனர்” என்று கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், “20,000 ரூபா கொடுத்தால், விடுதலை செய்கிறோம்; இல்லையென்றால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர்” என்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸூக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து, தற்போது தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் தேறி வருகிறது. இன்னும், 6 நாட்களுக்குள், வீட்டுக்கு வருவார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் வாசன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர், தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர்.

மரக்காணம் கலவரத்தில் இறந்த 2 பா.ம.க. தொண்டர்களுக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக கட்சியால் வழங்கப்படும். தமிழகத்தில் இறந்த அரியானா டிரைவருக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியது. ஆனால், கலவரத்தில் இறந்த 2 தமிழர்களுக்கு, அவர்கள் பா.ம.க.வினர் என்பதால், ஒரு காசு கூட நிதியுதவி வழங்கவில்லை.
பா.ம.க.வினரை கைது செய்யும் போலீசார், “20,000 ரூபா கொடுத்தால், விடுதலை செய்கிறோம்; இல்லையெனில், குண்டர் தடுப்புச் சட்டத்தில், கைது செய்து விடுவோம்” என, மிரட்டுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில், பா.ம.க.வைச் சேர்ந்த 24 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், 71 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எமர்ஜென்சி காலத்தில் கூட, இவ்வளவு கைது சம்பவங்கள் நடந்ததில்லை. அப்போது கூட, 80 பேர் மட்டுமே, மிசாவில் கைது செய்யப்பட்டனர். ஆனால், அ.தி.மு.க., அரசு, பா.ம.க.,வினரை தொடர்ந்து கைது செய்து வருகிறது. திராவிட கட்சிகளோடு, எப்போதும் கூட்டணி வைப்பதில்லை; இது சத்தியம்” என்றார்.
அட, இவரும் சத்தியம் பண்ணியிருக்கிறார். அடுத்த ஆண்டு,  நாடாளுமன்ற தேர்தலின்போது பார்ப்போம்!
viruvirupu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக